அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Friday, April 30, 2010

என்கிறாள்...
நில் என்றாள் 
செல் என்றாள்
பேசு என்றாள்
காதல் செய் என்றாள்
முத்தம் கொடு என்றாள்
கட்டியணை என்றாள்
இப்போது என்ன என்றேன்... விட்டுவிடு என்கிறாள்...

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 5

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4


வெறுமையான பார்வையில் என் நண்பனின் எதோ ஒரு உரையாடளுக்கு தலை அசைத்துக்கொண்டிருந்தேன் அவனுக்கும் தெரியும் என் மனம் அங்கு இல்லை என்று...     . "டக் டக்"  என்கின்ற மிக பலமான காலணி சத்தம் எல்லோரும் வாயிற்படியை நோக்க வைத்தது மூச்சிறைத்து நின்றால் அவள்... ஒன்றுக்கும் சற்று குறைவான நொடி தான்...

"பாய்(bye) சிவா" என்றவள் மின்னலாக மறைந்துவிட்டால்.. சிவா என் பெயர் அல்லவா ... ஏன்  திரும்ப வந்தால் இந்த சிறு விடயத்தை கூட என்னால் தாங்க முடியாது என்று நினைத்திருப்பாலோ.. மனது நெகிழ்ந்தது...வெறுமையில்  இழந்த நொடிகள் மின்னலாய் அவள் தோன்றிய நொடிகளில் சமன் செய்யப்பட்டது.  அவளுக்குள் காதல் இருந்ததோ இல்லையோ...  யாரும்  எதிர்பாராத இந்த நிகழ்வினால் எல்லோரும்  ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள். அங்கு காதல் உறுதி செய்யப்பட்டது வாழ்த்துக்களிலும் பார்வைகளிலும்.

அன்று சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லை புதிய ஒலிநாடவை உரக்க வைத்து கேட்டே ஆகா வேண்டும் என்கின்ற வெறி... இந்த நேரம் பார்த்து மின்சாரம் இல்லை...சரி அப்படி இப்படி என்று அரைமணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது "மிஸ்டர் ரோமியோ" A.R. ரகுமான் இசையில் முழு சத்தத்துடன் வைப்பதற்காக எல்லா கதவு சன்னல்களையும் மூடிவிட்டு ஆரம்பிக்க பொத்தானை அழுத்தும் போது கதவை யாரோ தட்டும் சத்தம்... வெறுத்துபோய் கதவை திறந்தால் சொந்த ஊரிலிருந்து அப்பாவை பார்க்க சிலர் வந்துள்ளனர் வெறுப்பு மனதில் மட்டும் பாவம் அவர்களுக்கு என்ன வேலையோ...முடிந்த வரை சத்தத்தை குறைத்து கேட்க ஆரம்பிதேன்... ஒரு பெரிய பிரச்சனை A.R. ரகுமான் இசையில் முதல் முறை கேட்கும் பொழுது சுத்தமாய் பிடிக்காது... அதற்கு விதிவிலக்கு ரோஜா படம் மட்டுமே... நேற்று கேட்ட
விண்ணை தண்டி வருவாயா...வரை அப்படி தான்.. முதலில் கேட்கும் பொழுது அதிகபட்ச எதிர்பார்ப்பால் மனம் லயிக்காது...

"மெல்லிசையே"     பாடலும் அப்படித்தான் முதலில் பிடிக்கவில்லை... ஆனால் எங்கோ இருந்த என்னவளை என்னருகில் கிடத்திய பாடல்... "எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்... உயிர் சுமந்து தவித்திருந்தேன்..." காலங்கள் என் காதலை எங்கோ தூக்கி அடித்துவிட்டன... ஆனால் அந்த சுகமான நிமிடங்கள்...

தொடரும்...

Thursday, April 29, 2010

முத்தம் - மொழி பெயர்ப்பு தேவையில்லை...குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள்
புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள்
கூட நடந்தால் இமயம் இளகியது... என்ன ஒரு வெப்பம்...
நேற்று கேட்டோமே ... கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில்
ஆமாம் கண்கள் பேச ஆரம்பித்துவிட்டன... 
காதினை கூர் படுத்தினேன்... மெல்லிய ஓர் சத்தம்...
என்ன இது விழி பேசவில்லையே... ஓ.. அதரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன.
தாங்கமுடியாத தவிப்பு... நெருங்கி நிதானமிலந்தேன்...   
 உயிர் உதறல் எடுத்தது... தள்ளினேன் அவளை... 
எங்கும் வெளிச்சம்...  மணி ஆறு... 
எங்கோ தூரத்தில் கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில்

உங்களுக்காக இங்கேயும்...
Tamilmp3world.Com ...

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4

அவள் சாதரணமாக பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு உள்ளுக்குல் ஆனந்தம் ஆர்பரித்துக்கொண்டிருந்தது வெளிய காட்ட முடியவில்லை ஏற்கனவே என் காதலை பற்றி எல்லோரும் அறிந்திருந்ததால் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றார்கள்.  நட்புக்கு அடித்தளம் போட்ட என் நண்பனை மனதார வாழ்த்திக்கொண்டிருந்தேன் பரஸ்பர சந்திப்பாக ஊர்,  முகவரி எல்லாம் மாற்றி கொண்டு வகுப்புக்குள் நுழைந்தோம்.

மனதினில் மிக பெரிய போராட்டம் ஐந்து வருடத்தை வீணாக்கிவிட்டு இங்கு வந்து சேர்ந்துளோம் ஆனால் காதல் அது இதுவென்று மனது கிடந்தது அலை பாய்ந்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை...

நட்போடு காதலையும் நான் வளர்த்து கொண்டிருந்தேன் ஆனால் எங்களை பார்ப்பவர்கள் நங்கள் இருவரும் காதலிப்பதாக கருத ஆரம்பித்துவிட்டனர்.

எப்பொழுதும் வகுப்பு முடித்தவுடன் என்னிடம் விடை பெற்றுவிட்டு தான் மற்றவர்களிடம் விடைபெற்று வீடு திரும்புவாள் இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் எந்த அளவிற்கு அவளின்  நேசத்திற்கு உரியவனாகிருப்பேன் என்று அவள் மிகவும் இனியவள் எப்பொழுதுமே சிரித்த முகம்... வித விதமாய் அவள் தேர்ந்தெடுத்து அணியும் உடைகள்... இன்னும் எவ்வளவோ... என்னை இன்பத்திலே புரட்டி போட்ட காலங்கள்...இனிப்பை தடவிய நிமிடங்கள்...அன்று நான் என் நண்பனோடு பேசி கொண்டிருந்தேன் வேக வேகமாய் வந்தவள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு என்னை கவனிக்காமல் சென்றுவிட்டால் நான் அழுகாத குறை அந்த வரவேற்பு அறை முழுக்க என் வகுப்பு தோழர்களும் தோழிகளும் தீவிரமாக எதை எதையோ பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரின் பார்வையும் என்னுடிய முகஅசைவுகளில் தான்... ஒரு கணம் மனம் வெற்றிடமாக தெரிந்தது... எதையும் சிந்திக்கும் மனநிலை இல்லை.

தொடரும்...    

Tuesday, April 27, 2010

பேச மறுத்த காதலி மீது அமிலம் வீசிய வாலிபர் - நேற்றைய செய்தி... தொடரும் செய்தி கூட...


நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது... என்ன காரணம்... ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்...

தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்...

இதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்குமா...

இந்த நூற்றாண்டில் காதல் படும் பாடு இருக்கிறதே... ஒன்றும் சொல்வதற்கு இல்லை...


பாவிகளே... காதலை நீங்கள் காயப்படுத்தி 
தயவிட்டு காதலித்தோம் என்று சொல்லாதீர்...  
பெண்களின் உள்ளத்தில... தேடவேண்டியதை 
வேறு எதிலோ தேடிவிட்டு... கிடைக்காத வன்மத்தில் 
அமிலத்தை வீசுகிரீரே...

சிறுதுளி வெந்நீர் பட்டு துடிக்கும் மனித தேகம்... 
எதிரிக்கும் செய்ய அஞ்சும் இப் பாதக செயலை 
இங்கு எப்படி தான் செய்கிரீரோ...
காதலிக்கும் பெண் ஒருத்தி உன் காதல்... மறுதளித்தால்
இப்படி தான் செய்வீரோ...   பாவிகளே...
இப்படி தான் செய்வீரோ...

காதலை திணிக்காதீர்...  காதலியை வருத்தாதீர்...காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 3

ஒரு நாள் வந்தது...நான் கட்டிகொண்டிருந்த காதல்கோட்டை கதவு திறக்க... என்னவள் என்னிடம் பேசினால் முதல் வார்த்தை "கொஞ்சம் தள்ளி போங்க" வழி மறித்து நான் நின்றதை அப்போது தான் உணர்ந்தேன்.

ஒரு வாரம் அந்த சொற்களின் மயக்கத்தில் கழிந்தது. அங்கே சேர்ந்தவர்கள் பல வகை அதில் ஒரு நண்பன் மிக எளிதில் ஒட்டிகொண்டான் நானும் தான். நல்லவன் என்ன கொஞ்சம் முரட்டு சுபாவம் என் காதலை வேறு யாரிடம் சொல்ல அவன் தான் கிடைத்தான் பெரிய வரவேற்பு அவனிடம் காதல்கோட்டை வலுத்தது.

காலை 8:45 வடபழனி பேருந்து நிலையம் அவள் தினந்தோறும் வீட்டிற்கு செல்லும் பேருந்தை பிடிக்க அங்குதான் வருவாள். அவளை பார்க்க வந்து விட்டு பார்க்காதது போல் வேறு எங்கோ போவது போல் நான் போட்ட வேடம் சிவாஜி இருந்தால் பாரட்டி இருப்பார். அன்று அவளை காணோம் வகுப்புக்கு வந்தவள் பேருந்து நிலையத்துக்கு வரவில்லையே மனது கிடந்தது தவித்தது. வேறொரு வகுப்பில் படிக்கும் எங்களுக்கு முன்னால் சேர்ந்த மாணவனும்(சீனியர்)  தினமும் என்னை போல் வர ஆரம்பித்தான். இதை போய் என் முரட்டு நண்பனிடம் சொல்ல கதை கெட்டது அவளை தவிர அனைவர்க்கும் தெரிந்ததுவிட்டது நான் அவளை காதலிப்பது.  என் நண்பன் போய் அவனிடம் நான் காதலிப்பதாகவும் அதும் அவள் எங்கள் வகுப்பை சேர்ந்தவள் என்றும் சொல்லி சற்று மிரட்டியும் கூட அவனை ஒதுக்கிவிட்டான் பயன் அவன் முழு கணிபொறி மையத்திலும் பற்றவைத்துவிட்டான்.  ஒரு தலை காதல் இருதலைகொள்ளி எறும்பு ஆனது. 

ஆறுமுகமும் (முரட்டு நண்பன் ) நானும் பேசிக்கொண்டிருந்த போது அவள் கடந்து சென்றால்...

"எங்க கிட்டலாம் பேச மாட்டடீங்களா" என்றானே பார்க்கலாம் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை ஆங்கிலத்தில் ஒரு பழமொழி "முதலில் ஏற்படுத்தும் நம்மை பற்றிய கருத்தே என்றும் நிலைத்திருக்கும்" (மொழிபெயர்ப்பு தவறோ.. First impression is the best impression) இவனது முரட்டு சுபாவம் நம்மை சிக்கலில் விட்டுவிட்டதே என்று யோசித்து கொண்டிருந்தேன் நடந்ததோ... வேறு...


தொடரும்...

Sunday, April 25, 2010

இரவெல்லாம் விழித்திருந்தேன்...


இரவெல்லாம் விழித்திருந்தேன்...
இமைகள் இரண்டும் இணையவில்லை...
இளங்காற்று இனிதாய்...
இமையோரம் இம்சிக்க,,,
இவள் ஒருத்தி தினந்தோறும்... என்
இரவை தின்னுகின்றால்...
இமை கலங்கி...இழந்த இரவுகள்...
இன்று...பகல் பொழுதை மென்று தின்ன..
இளகுமா உன் நெஞ்சம்...
இம்சிக்க வந்தவளே...
இரவினையும் பகலினையும்..
இனி நான் தான் அறிவேனோ...
இடம் மாறிப்போனதென்ன...
இந்த நொடி என் நினைவலைகள்...

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்
சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் 
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்..

Saturday, April 24, 2010

தெரிந்ததா...

எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்
-நித்யானந்தா

அவர் தான் எல்லாவற்றையும்... முகத்தில் அறைவது போல்
சேவை என்று சொல்லிவிட்டாரே.. இனி சொல்வதற்கு என்ன
இருக்கிறது...


தமிழர்கள் என்றால் அமிதாபுக்கு கிள்ளுக்கீரையா?
-வைகோ

ஏன் ராஜபட்சே மட்டும் குத்தகைக்கு வாங்கிவிட்டாரா என்ன...
அறிக்கையெல்லாம் பிரமாதம்...

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்
சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் 
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்..

இதயத்தை திருடாதே....பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்... இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்..
ஒரு கவிதை படித்த திருப்தி...

உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்... மோதி...வம்பிழுத்து..பரிதாபத்துடன்... ஆரம்பிக்கும் காதல்...

திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா...மணிரத்னம்..
p .c.ஸ்ரீ ராம்.... அப்பப்பா... விளையாடிருக்கிறார்கள்...

தனிமையிலே பார்த்தேன்....இனம் புரியாத உணர்வு...

நினைவுக்குள் வினவு... லீனா...டோண்டு...ஜெயமோகன்...
எல்லா விடயங்களும் கரைந்தது...
  
உற்சாகமாய் இதோ எனது அடுத்த கவிதை....

நான் தொலைத்த பத்து ஆண்டுகள்...
என் தமிழ் பசியை கூட்டுகிறது...
தமிழ் பேசி...தமிழ் எழுதி...என் நண்பர்...
பலர் உள்ளார் இந்த இணையத்திலே...
  
நான் வேண்டும் ஒரு வரம்தனை 
தெய்வம் தான் தரவேணும்...
தர்க்கத்தில் இடுபடும் அனைவருமே
உணரும்வண்ணம்...
வீழ்ந்த இனம் தலை நிமிர ஒற்றுமை வேண்டும் இங்கே...

என் இனம் அழித்த பாவி எல்லாம் கைதட்டி சிரிகின்றான்...
குறுகிய தளம் விட்டு... உலகினை பாருங்கள்,,, 

எல்லோரும் துரோகி என்று மொத்தமாய் ஒதுக்காதீர்...
வள்ளுவன் சொன்னது போல் நன்றை மட்டும் எடுப்போமே...

இருக்கின்ற கருத்து வேற்றுமையை...
தடிக்கும் வார்த்தையாலே.. தடவி கொடுக்காதீர்...  

நம் வேற்றுமையை அவருக்கு சரியான
வழிமுறையில்...
உணர்த்திதான் சொல்லவேண்டும்...
அதுவே நம் இனம் நிமிர வழிவகுக்கும்...

---- நண்பர்களே இனி நீங்கள் பேசுங்கள்.....


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு

சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் 
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்...

Friday, April 23, 2010

பூத்ததிங்கே... வலைபூவில்...
வார்த்தைகளை அள்ளி தெளித்து... 
கவிதை ஒன்று வைத்துள்ளான்... 
நேசத்தை வீதியெங்கும் கவிதையாலே ...
வீசியுள்ளான்...
மாற்றத்தை இன்று அவள்...
விழியோரம் காண்கின்றான்...
அதரங்கள் விரிய இங்கே...
அவள்  ஏதேதோ பேசுகின்றால்....
இமை மூடா நிலையினிலே...
இனிப்பதனை நுகர்கின்றான்... 
மடித்திருந்த கவிதை மொட்டு.. 
தென்றலோடு உறவாட..
கொடுக்கத்தான்... உரமில்லை...
பூத்ததிங்கே...   வலைபூவில்... 


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்


உளவுத்துறை : ஐயா... பார்வதி அம்மா... சென்னைல...

கருணாநிதி :  யோவ்வு.. யாருய அது...

உளவுத்துறை : பிரபாகரன்...

கருணாநிதி : என்னது... பிரபாகரனா...

உளவுத்துறை : ஐயா... அதிர்ச்சி அடையாதீங்க... பிரபாகரன் அம்மா தான்...

கருணாநிதி : அதானே பார்த்தேன்... ஒரு வேலை சோறு போச்சுயா  அவனாலே... சும்மா உட்கார்தேன்...உண்ணாவிரதம்ட்டனுங்க... வேற வழியில்லாம போச்சு...

உளவுத்துறை : ஐயா... . சிகிச்சைகாக இந்தியா  வந்துருக்காங்க....

கருணாநிதி : மத்தியில கூட்டாச்சி... மாநிலத்தில் சுயாட்சி... தேர்தல் வர நேரத்துல... இப்ப தான் செம்மொழி அது இதுனு ஒரு மாதிரி மக்கள மயக்கி வச்சிருக்கேன்... இது என்னைய புது பிரச்சனை... இந்திய தானே வந்திருகாங்க... தமிழ்நாட்டுக்கு இல்லல...

உளவுத்துறை : ஐயா... .சென்னை விமான நிலையத்தில...

கருணாநிதி : நிறுத்துயா...  ( மனசுக்குள் "விட்டா  வைகோ சிந்துபாடிவிடுவான்" )....
கண் ஜடை கட்ட ஒரு அல்லக்கை தொலைபேசியை நீட்ட...
யோவ்வு..எனக்கு தான் ஹிந்தி வராதே... அந்த அம்மாவை அப்படியே... அனுப்ப மேடம் கிட்ட வழி இருக்கானு கேள்யா ...

அல்லக்கை ஏதோ பேசி  தொலைபேசியை துண்டிக்க...

கருணாநிதி : என்னயா ஏதாவது வழி இருக்கா...

அல்லக்கை : அந்தம்மா... போன ஆட்சியில...

கருணாநிதி : நீ ஒண்ணு சொல்லத... (எதோ புரிந்தது போல்...உளவுத்துறை அதிகாரியை நோக்கி...) உள்ள விடாதயா...

   
உளவுத்துறை : வயசானவங்க.. கொஞ்சம் தங்கவச்சு அனுப்பட்டுமா...

கருணாநிதி :   பேர் என்ன...

உளவுத்துறை : ஐயா... போயிட்டுவரேங்க...

* இப்ப புரியுதா தலைப்பு.....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்...

Thursday, April 22, 2010

சிலை திறப்புக்கு கருணாநிதி வருவதை எதிர்க்கவில்லை- உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்..


நேற்று சொன்னார்கள்...எதிர்போம் என்று...
இன்று சொன்னார்கள்...வரவேற்போம் என்று...
நாளை என் சொல்வார்....

அம்பேத்கர் சிலை சிரிக்க... மாமன்னன் கருணாநிதியோ...
தன் பெருமை கதையளக்க...
பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்...புன்னகைப்பார்...
வழக்கறிஞர்...

கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்...ஆனால் ஒரு
அரசியல்வாதி முட்டையால் அடிவாங்க...
பொறுக்கமட்டார்... திருப்பி கொடுத்தார்...
இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் பயத்தால்...

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்...

சு.ப. வீரபாண்டியன் வாக்குமுலம்.... பார்வதி அம்மாளின் பிரச்சனையில் கருணாநிதிக்கு வக்காலத்து...


//இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட இயலுமா? என்று கேட்டார்.

அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்.

இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.//

நீ எல்லாம் ஒரு மனுசன்னு உனக்கும் தொலைபேசியில் தகவல் சொல்லிருக்காங்க பாரு...

ஆகா மொத்தம் எல்லாரும் கிளம்பிடீங்க தமிழருக்கு எதிர... இங்க கூட உங்களுக்கு தகவல் முதல்ல சொல்லவில்லை என்பது தான் பிரச்சனை...

நல்ல இருங்க... சோனியாவுக்கும்...கருணாநிதிக்கும் காவடி தூக்கி...முடியல...

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

Wednesday, April 21, 2010

கொழும்பு பட விழா ரஜினி கமல் இருவருக்கும் அழைப்பு


போவார்கள் யார் சொல்ல இயலும்...
இருவருக்கும் தமிழ் முகமூடி.. கழட்டுவது.. பெரிய விடயமல்ல....

ராஜபக்சே ஒரு புத்திசாலி... ஒரு இந்தியனை வைத்து
இன்னொரு இந்தியனை அழைகிறான்.

இந்தியப்  பட்டியலில்...
பாவம் தமிழனும் ஒரு அடையாளம் தானே...

தமிழ் மொழி பேசி... மாநிலத்தில் வாழ்ந்து..
மூத்தோர் கதை கேட்டு...
உணர்ச்சியற்று வாழும் இனமாகி போனோமே...

துரோகத்தால் அழிந்த இயேசு... உயிர் நீத்து.. பாவிகளின் கருவறுத்தார்... அது நடந்த கதை...
ஓர் உயிர் அல்ல பல்லாயிரம்..
உங்கள் கருவறுக்க அந்த உயிர்... தமிழ் பெண்ணின் கருவறையில்...
இது தொடரப்போகும் கதை...
-


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 


பிசிசிஐ - கட்சி பேதமின்றி கொள்ளையடிப்போம்...இல்லாத விருப்பத்தை... நெடுங்காலம் புகட்டிவிட்டு...
வணிகத்தின் வளர்ச்சிக்காக... தேசியப்பற்று என்றோர்... 
தேடுகின்றார் தேசியத்தை... இந்தியத்தின் நகரமெங்கும்....

பணம் கொழிக்கும் விளையாட்டை... தேசியத்தில் இணைத்து இங்கு...
பெரும்பணம் ஈட்டி உள்ளார்...

தலைப்பு செய்தியிலும் இவர் தாம்... ஆகிரமிப்பு செய்கின்றார்...
இந்தியாவின் மக்கள் தொகையில்... 30 சதவிகிதம்...
வறுமையினில் உழல்கின்றார்... 
குட்டியாய் செய்தி இங்கே... 
செய்திதாளின் இறுதியிலே...


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

Tuesday, April 20, 2010

பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!-அடித்து நொறுக்கிய மக்கள்!!!


அடடா...கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கு... சென்னை அலுவலகத்தில் நடந்த இந்த நடவடிக்கை மக்களிடம் இன்னும் உணர்ச்சி இருக்கிறதென்பதை வெளிபடுத்துகிறது.... நான் ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்... மக்கள் உணர்ச்சி அற்றவராய் அல்லது சகிப்புத்தன்மையோடு உள்ளவரை எதுவும் மாறப்போவதில்லை என்று...

இன்று அந்த ஊழியர்கள் மக்களின் உணர்ச்சியையோ அல்லது சகிப்புத்தன்மையையோ சோதித்துவிட்டர்கள்.. போல....

நல்ல வேலை காவல்துறை காட்டுமிரண்டிகள்... தடியடி நடத்தவில்லை...
மக்கள் தப்பித்தனர்...


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

காரணம் விளங்கவில்லை....


நிழலினை போல தொடர்ந்தேன்...நீ நிழலாகவே என்னை எண்ணிவிட்டாய்...
மழையாக பொழிந்தேன் அன்பை... உணராமல் ஒதுங்கி நின்றாய்....
நிற்பதற்கு நிலமில்லை என் கண்ணீரே வீதீ எங்கும்...
நீ தப்பவில்லை சொல்வதற்கு... இவன் தான் என் வருங்கால கணவன் என்று...
பெண்ணே... விடியல் வரை விழித்திருந்தேன்.... காரணம் விளங்கவில்லை....
பல காலம் கழிந்த பின்னும்.... இன்னும்... காரணம் விளங்கவில்லை....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

Sunday, April 18, 2010

முன்னால் போராளிகள் தவறு... தீவிரவாதிகள்...சிங்கள ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிகொண்டிருக்கும் முன்னால் போராளியின் பார்வையிலே.... 

போராடினோம்...போராடினோம்...
தீவிரவாதி என்றார்கள்...
தோல்வியின் விளிம்பினில்...
ஆயுதங்களின் அமைதி என்றோம்....
தலைமையை பற்றி பலவாறு தகவல்...
நாங்களோ அந்நியனின் கைகளிலே...
அவன் எங்களை தமிழனாக பார்த்தான்... மனிதர்களாக அல்ல...
மானத்திற்காக போராடினோம் அன்று..
இன்று தினம் தினம் போராடி கொண்டிருக்கிறோம் உயிருக்காக...

தயவு செய்து யாரும் பேசாதீர்கள் மனிதாபிமானம் பற்றி...
நாங்கள் முன்னால் போராளிகள் தவறு தீவிரவாதிகள்... மனிதர்கள் அல்ல....
அழுவதற்கு கூட அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்.....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

மின்சாரம்... அம்மா... மின்சாரம்...அதிமுக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் - ஜெ

இது கொஞ்சம் அதிகந்தான்... உற்பத்தி செய்கின்ற  மின்சாரம் முக்கால்வாசியை பக்கத்து மாநிலத்துக்கு கொடுத்துவிட்டு... மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதி....

ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு...இல்லாவிட்டால் ஒரு பேச்சு....

இவர்களின் ஆர்ப்பாட்டம்... போராட்டம்...கண்டனம்...அறிக்கை... எல்லாம் பொய் முலாம் பூசபட்ட அவர்களின் ஆட்சியை பிடிக்கும் ஆசை...மக்களுக்கு இவைகளால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை...

இதை புலம்பலாக எடுத்துகொண்டாலும் இல்லை உங்களை யோசிக்க வைத்தாலும்.... என் கடமை இடித்துரைப்பது....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 2


இயற்கையில் மிகவும் கூச்ச சுபாவம் எனக்கு... ஒரு வருடம் வீணாகபோகும் என்று என்னை ஆங்கில வழி கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டார்... எனது அன்னை... அது ஒரு தனி கதை.... ஆங்கில பள்ளியில் ஒரே தமிழ் மாணவன்....தலையை சுற்றுகிறதா... அந்த நிகழ்வு என் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வுகளை இன்று வரை உணர்கிறேன்.

தமிழ் வழி கல்வியில் படித்ததை நான் இழிவாக எண்ணவில்லை ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறையில் நான் எதிர்கொண்ட சிக்கல்கள்... என்னை பல முறை தடுமாறவைத்தது... இதை ஏன் சொல்லுகிறேன் என்றால்... நான் நுழைந்த கணிபொறி மையத்தின் வரவேற்பு அறையிலேயே தட்டு தடுமாறி பேசிய ஆங்கிலம் அங்கிருந்த இரு பெண்களையும் இம்சித்துவிட்டது .அப்பாவிற்கு தெரியாமல் கல்வி உதவி நிதி தேர்வு(Scholarship Exam) எழுதி மொத்த கட்டணத்தில் அறுபது சதவிகிதம் போக நாற்பது சதவிகிதம் கட்டினால் போதும் என்றனர் அந்த பெண்கள் மேலும் இந்த தகவல் எனது இல்லத்திற்கும் அனுபபட்டிருப்பதாக சொல்லி மகிழ்ச்சி கடலில் தள்ளினார்கள்.   

நான் சொன்னேனே ஐந்து வருட கஷ்டகாலம்...என் அப்பா என் மேல் முழுவதுமாக நம்பிக்கை இழந்திருந்த காலம்... அந்த சமயத்தில் தான் அந்த கடிதம் வந்தது துறைமுகத்தில் தரைதட்டி நின்றிந்த என் வாழ்கை கப்பலை திரைகடலோட வைத்த கடிதம்... என் அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி.  கல்விக்கு பணம் கட்ட என்றுமே கவலைபடாத குடும்பம் அதனால் பணத்தை பற்றி கல்வி இல்லை. எனது பதினோரம் வகுப்பு பாடப்புத்தகம், அடகு வைத்த என் அன்னையின் தாலியினால் வாங்கப்பட்டது. நான் எடுத்த மதிப்பெண்களில் தான் என் அப்பாவிற்கு மகிழ்ச்சி.

அதிகாலை மணி நான்கு இருக்கும் நான் எழுந்தபொழுது... ஆறுமணிக்கு நான் கணிபொறி மையத்தில் இருக்கவேண்டும்...எனக்கு அழகாக இருந்த ஒரு ஆடை அணிந்து பேருந்து வழிதடத்தில் காத்திருந்தேன் அந்த அதிகாலை பொழுதினில்... அது சென்னைக்கு அருகில் அமைந்த கிராமம்.. புகை காக்கி வந்து நின்ற பேருந்தில் இனிய காலை  பொழுது பயணம் ஆரம்பம்... என் வாழ்க்கையின் திருப்புமுனை நாள்... முரட்டு சூரியனை இதமானவன் போல் காலநிலை அந்த நிமிடம் மனிதர்களை ஏமாற்றிகொண்டிருந்தது. வழி நெடுக பச்சை பசேல் என்றிருந்த வயல் வரப்புகள் மனதை ரம்மியபடுத்தின...

வகுப்பறையில் நுழையும்போதே... கண்கள் அலைபாய்ந்தன...மிக சரியாய் இரண்டு நிமிடங்களில் ஆசிரியர் நுழைந்தார்... இனிதே எனது கணிபொறி பாடம் ஆரம்பித்தது...
பல நண்பர்கள் பெண் நண்பிகளும் தான்...முதல் சில நாட்கள்...வழகமானதாகத்தான் இருந்தது...பாழக்கிய ஐந்து வருடங்கள் மனதை உறுத்திகொண்டிருந்ததால் மிக கடுமையாக படிக்க ஆரம்பித்தேன்..முயற்சிக்கு நல்ல பலன்... நன்கு படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவனானேன் ஆனால் மனதில் ஒரு பெண் மட்டும் இனம் தெரியாத தொல்லை கொடுத்தால்...

காலை பொழுதினில் வகுப்புக்கள் ஆரம்பிப்பதால் என் வகுப்பில் இருந்த அனைவரிடமும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும் அவளிடம் சற்று அதிகமாகவே... குளித்து சரியாய் காயாதா கூந்தலினால்..அவள் அணிதிருக்கும் மேல் சட்டையின் பின்னால்... மீதமிருக்கும் ஈரம் போடும் கோலங்கள்... ஒவ்வொரு காலைபொழுதும்... என்னை...வார்த்தைகளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன்... நான் ஒரு சராசரி...கவி அல்லவே...

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 3


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

Thursday, April 15, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 1


எங்கே ஆரம்பிப்பது...

பல பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனதில் யாரைப்பற்றி சொல்லுவது... இன்று வரை இணையதளங்களின் ரகசிய பதில்களில்(Secret Password Answer) உலவி கொண்டிருக்கும் அவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.....

அறியாமை என்ற வார்த்தை எவ்வளவு வலிமையானது என்பதே அறியாத வயது...

தெரிந்தது எல்லாம்... படிக்கவேண்டும் அப்பாவுக்காக...  பத்தாம் வகுப்பில் 300யை தாண்டியது மதிப்பெண்... குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது....நெருங்கிய சொந்தங்களில் யாருமே தொடாத மதிப்பெண் என்ற சந்தோசம்....

அப்பாவின் என்னை பற்றிய அண்ணா பொறியில் பல்கலைகழக மாணவன் கனவு வலுக்க தொடங்கியது...

ஒரு தோல்வியில் இருந்து வெற்றி பிறக்கும்.... ஆனால் எனக்கோ வெற்றியில் இருந்து தோல்வி ஆரம்பமானது...... இடமாற்றம் .... பெற்றோர்களின் அரவணைப்பில் இல்லாதது....நான் இழந்தது மொத்தமாய், ஐந்து வருடங்களை.... கஷ்டகாலங்கள்...போகட்டும்....

இந்தியாவையே தலை நிமிர்த்திய மென்பொருள் துறை... இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கம்....மணிரத்தினத்தின் ரோஜா படம் கொடுத்த பிரம்மிப்பு.....என்னையும் கொண்டுபோய் நிறுத்தியது சென்னையின் A.V.M திரை அரங்கின் எதிரே...... Aptech computer education.....Vadapalani.....என்னும் தங்க எழுத்துகள் பளபளத்து கொண்டிருந்தது.

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 2


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

தலைப்பு


நான் எழுத தொடங்கியபோது ...
எல்லாம் தெரிந்திருபதாக ஒரு கர்வம்.....
நான் மற்ற பதிவர்களை படிக்க தொடங்கியபோது...
மனதில் உறைத்தது நான் இன்னும் அ...ஆ... தான்...என்று...


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

Related Posts with Thumbnails