அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Sunday, April 18, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 2


இயற்கையில் மிகவும் கூச்ச சுபாவம் எனக்கு... ஒரு வருடம் வீணாகபோகும் என்று என்னை ஆங்கில வழி கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டார்... எனது அன்னை... அது ஒரு தனி கதை.... ஆங்கில பள்ளியில் ஒரே தமிழ் மாணவன்....தலையை சுற்றுகிறதா... அந்த நிகழ்வு என் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வுகளை இன்று வரை உணர்கிறேன்.

தமிழ் வழி கல்வியில் படித்ததை நான் இழிவாக எண்ணவில்லை ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறையில் நான் எதிர்கொண்ட சிக்கல்கள்... என்னை பல முறை தடுமாறவைத்தது... இதை ஏன் சொல்லுகிறேன் என்றால்... நான் நுழைந்த கணிபொறி மையத்தின் வரவேற்பு அறையிலேயே தட்டு தடுமாறி பேசிய ஆங்கிலம் அங்கிருந்த இரு பெண்களையும் இம்சித்துவிட்டது .அப்பாவிற்கு தெரியாமல் கல்வி உதவி நிதி தேர்வு(Scholarship Exam) எழுதி மொத்த கட்டணத்தில் அறுபது சதவிகிதம் போக நாற்பது சதவிகிதம் கட்டினால் போதும் என்றனர் அந்த பெண்கள் மேலும் இந்த தகவல் எனது இல்லத்திற்கும் அனுபபட்டிருப்பதாக சொல்லி மகிழ்ச்சி கடலில் தள்ளினார்கள்.   

நான் சொன்னேனே ஐந்து வருட கஷ்டகாலம்...என் அப்பா என் மேல் முழுவதுமாக நம்பிக்கை இழந்திருந்த காலம்... அந்த சமயத்தில் தான் அந்த கடிதம் வந்தது துறைமுகத்தில் தரைதட்டி நின்றிந்த என் வாழ்கை கப்பலை திரைகடலோட வைத்த கடிதம்... என் அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி.  கல்விக்கு பணம் கட்ட என்றுமே கவலைபடாத குடும்பம் அதனால் பணத்தை பற்றி கல்வி இல்லை. எனது பதினோரம் வகுப்பு பாடப்புத்தகம், அடகு வைத்த என் அன்னையின் தாலியினால் வாங்கப்பட்டது. நான் எடுத்த மதிப்பெண்களில் தான் என் அப்பாவிற்கு மகிழ்ச்சி.

அதிகாலை மணி நான்கு இருக்கும் நான் எழுந்தபொழுது... ஆறுமணிக்கு நான் கணிபொறி மையத்தில் இருக்கவேண்டும்...எனக்கு அழகாக இருந்த ஒரு ஆடை அணிந்து பேருந்து வழிதடத்தில் காத்திருந்தேன் அந்த அதிகாலை பொழுதினில்... அது சென்னைக்கு அருகில் அமைந்த கிராமம்.. புகை காக்கி வந்து நின்ற பேருந்தில் இனிய காலை  பொழுது பயணம் ஆரம்பம்... என் வாழ்க்கையின் திருப்புமுனை நாள்... முரட்டு சூரியனை இதமானவன் போல் காலநிலை அந்த நிமிடம் மனிதர்களை ஏமாற்றிகொண்டிருந்தது. வழி நெடுக பச்சை பசேல் என்றிருந்த வயல் வரப்புகள் மனதை ரம்மியபடுத்தின...

வகுப்பறையில் நுழையும்போதே... கண்கள் அலைபாய்ந்தன...மிக சரியாய் இரண்டு நிமிடங்களில் ஆசிரியர் நுழைந்தார்... இனிதே எனது கணிபொறி பாடம் ஆரம்பித்தது...
பல நண்பர்கள் பெண் நண்பிகளும் தான்...முதல் சில நாட்கள்...வழகமானதாகத்தான் இருந்தது...பாழக்கிய ஐந்து வருடங்கள் மனதை உறுத்திகொண்டிருந்ததால் மிக கடுமையாக படிக்க ஆரம்பித்தேன்..முயற்சிக்கு நல்ல பலன்... நன்கு படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவனானேன் ஆனால் மனதில் ஒரு பெண் மட்டும் இனம் தெரியாத தொல்லை கொடுத்தால்...

காலை பொழுதினில் வகுப்புக்கள் ஆரம்பிப்பதால் என் வகுப்பில் இருந்த அனைவரிடமும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும் அவளிடம் சற்று அதிகமாகவே... குளித்து சரியாய் காயாதா கூந்தலினால்..அவள் அணிதிருக்கும் மேல் சட்டையின் பின்னால்... மீதமிருக்கும் ஈரம் போடும் கோலங்கள்... ஒவ்வொரு காலைபொழுதும்... என்னை...வார்த்தைகளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன்... நான் ஒரு சராசரி...கவி அல்லவே...

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 3


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

3 comments:

’மனவிழி’சத்ரியன் said...

//அனைவரிடமும்
ஒரு புத்துணர்ச்சி இருக்கும்
அவளிடம் சற்று அதிகமாகவே...
குளித்து சரியாய் காயாதா கூந்தலினால்..
அவள் அணிதிருக்கும் மேல் சட்டையின் பின்னால்... மீதமிருக்கும் ஈரம் போடும் கோலங்கள்...
ஒவ்வொரு காலைபொழுதும்... என்னை...
வார்த்தைகளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன்... //

இதுக்கு பேருதான்யா கவிதை.

//நான் ஒரு ’சராசரி...கவி’ அல்லவே//

மனசுக்குள்ள ‘மகாகவி’-ன்னு நெனப்பு!

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

வணக்கம் கவிஞரே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Priya said...

தலைப்பும் எழுதிய விதமும் நல்லா இருக்கு!


//குளித்து சரியாய் காயாதா கூந்தலினால்..அவள் அணிதிருக்கும் மேல் சட்டையின் பின்னால்... மீதமிருக்கும் ஈரம் போடும் கோலங்கள்... ஒவ்வொரு காலைபொழுதும்... என்னை...வார்த்தைகளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன்...//பெண்னை பார்த்தும் கவிதை வ‌ரலைன்னா எப்படிங்க....பாதி கவிதை எழுதி இருக்கிங்க மீதி வார்த்தகளை தேடி கவிதையாய் கொடுங்க!

Post a Comment

Related Posts with Thumbnails