அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Tuesday, April 27, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 3

ஒரு நாள் வந்தது...நான் கட்டிகொண்டிருந்த காதல்கோட்டை கதவு திறக்க... என்னவள் என்னிடம் பேசினால் முதல் வார்த்தை "கொஞ்சம் தள்ளி போங்க" வழி மறித்து நான் நின்றதை அப்போது தான் உணர்ந்தேன்.

ஒரு வாரம் அந்த சொற்களின் மயக்கத்தில் கழிந்தது. அங்கே சேர்ந்தவர்கள் பல வகை அதில் ஒரு நண்பன் மிக எளிதில் ஒட்டிகொண்டான் நானும் தான். நல்லவன் என்ன கொஞ்சம் முரட்டு சுபாவம் என் காதலை வேறு யாரிடம் சொல்ல அவன் தான் கிடைத்தான் பெரிய வரவேற்பு அவனிடம் காதல்கோட்டை வலுத்தது.

காலை 8:45 வடபழனி பேருந்து நிலையம் அவள் தினந்தோறும் வீட்டிற்கு செல்லும் பேருந்தை பிடிக்க அங்குதான் வருவாள். அவளை பார்க்க வந்து விட்டு பார்க்காதது போல் வேறு எங்கோ போவது போல் நான் போட்ட வேடம் சிவாஜி இருந்தால் பாரட்டி இருப்பார். அன்று அவளை காணோம் வகுப்புக்கு வந்தவள் பேருந்து நிலையத்துக்கு வரவில்லையே மனது கிடந்தது தவித்தது. வேறொரு வகுப்பில் படிக்கும் எங்களுக்கு முன்னால் சேர்ந்த மாணவனும்(சீனியர்)  தினமும் என்னை போல் வர ஆரம்பித்தான். இதை போய் என் முரட்டு நண்பனிடம் சொல்ல கதை கெட்டது அவளை தவிர அனைவர்க்கும் தெரிந்ததுவிட்டது நான் அவளை காதலிப்பது.  என் நண்பன் போய் அவனிடம் நான் காதலிப்பதாகவும் அதும் அவள் எங்கள் வகுப்பை சேர்ந்தவள் என்றும் சொல்லி சற்று மிரட்டியும் கூட அவனை ஒதுக்கிவிட்டான் பயன் அவன் முழு கணிபொறி மையத்திலும் பற்றவைத்துவிட்டான்.  ஒரு தலை காதல் இருதலைகொள்ளி எறும்பு ஆனது. 

ஆறுமுகமும் (முரட்டு நண்பன் ) நானும் பேசிக்கொண்டிருந்த போது அவள் கடந்து சென்றால்...

"எங்க கிட்டலாம் பேச மாட்டடீங்களா" என்றானே பார்க்கலாம் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை ஆங்கிலத்தில் ஒரு பழமொழி "முதலில் ஏற்படுத்தும் நம்மை பற்றிய கருத்தே என்றும் நிலைத்திருக்கும்" (மொழிபெயர்ப்பு தவறோ.. First impression is the best impression) இவனது முரட்டு சுபாவம் நம்மை சிக்கலில் விட்டுவிட்டதே என்று யோசித்து கொண்டிருந்தேன் நடந்ததோ... வேறு...


தொடரும்...

3 comments:

காமராஜ் said...

தொடருங்கள்

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே. நல்ல நடையில் அழகாகத் தொடர்கிறீர்கள்.

kirukalkal said...

மலரும் நினைவுகள்

Post a Comment

Related Posts with Thumbnails