அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Saturday, April 24, 2010

இதயத்தை திருடாதே....பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்... இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்..
ஒரு கவிதை படித்த திருப்தி...

உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்... மோதி...வம்பிழுத்து..பரிதாபத்துடன்... ஆரம்பிக்கும் காதல்...

திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா...மணிரத்னம்..
p .c.ஸ்ரீ ராம்.... அப்பப்பா... விளையாடிருக்கிறார்கள்...

தனிமையிலே பார்த்தேன்....இனம் புரியாத உணர்வு...

நினைவுக்குள் வினவு... லீனா...டோண்டு...ஜெயமோகன்...
எல்லா விடயங்களும் கரைந்தது...
  
உற்சாகமாய் இதோ எனது அடுத்த கவிதை....

நான் தொலைத்த பத்து ஆண்டுகள்...
என் தமிழ் பசியை கூட்டுகிறது...
தமிழ் பேசி...தமிழ் எழுதி...என் நண்பர்...
பலர் உள்ளார் இந்த இணையத்திலே...
  
நான் வேண்டும் ஒரு வரம்தனை 
தெய்வம் தான் தரவேணும்...
தர்க்கத்தில் இடுபடும் அனைவருமே
உணரும்வண்ணம்...
வீழ்ந்த இனம் தலை நிமிர ஒற்றுமை வேண்டும் இங்கே...

என் இனம் அழித்த பாவி எல்லாம் கைதட்டி சிரிகின்றான்...
குறுகிய தளம் விட்டு... உலகினை பாருங்கள்,,, 

எல்லோரும் துரோகி என்று மொத்தமாய் ஒதுக்காதீர்...
வள்ளுவன் சொன்னது போல் நன்றை மட்டும் எடுப்போமே...

இருக்கின்ற கருத்து வேற்றுமையை...
தடிக்கும் வார்த்தையாலே.. தடவி கொடுக்காதீர்...  

நம் வேற்றுமையை அவருக்கு சரியான
வழிமுறையில்...
உணர்த்திதான் சொல்லவேண்டும்...
அதுவே நம் இனம் நிமிர வழிவகுக்கும்...

---- நண்பர்களே இனி நீங்கள் பேசுங்கள்.....


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு

சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் 
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்...

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

s it is a nice movie, thanks for sharing even after 50 years we will enjoy this film

என்.ஆர்.சிபி said...

தெலுங்கிலும் இந்தப் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்!

என்.ஆர்.சிபி said...

அருமையான படம்! பாடல்களும் கூட!

குறிப்பாக "காவியம் பாடவா கண்களே! புது மலர் பூத்திடும் வேளை"

"ஓ! ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா..."

என்.ஆர்.சிபி said...

//thanks for sharing even after 50 years //

என்ன படம் வந்து 50 வருஷத்துக்கு மேல ஆச்சா? அப்போ எனக்கு 60 ம் கல்யாணம் செய்யுற வயசு ஆயிடுச்சா?

ராசராசசோழன் said...

@நன்றி ராம்ஜி_யாஹூ
@நன்றி என்.ஆர்.சிபி

வருகைக்கும் பகிர்வுக்கும்.....

இத்தனைக்கும் அந்த படம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட படம்..

ஓ பாப்பா...பாப்பா.. லாலி பாடலை மறந்துவிடீர்கலே....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நான் அதிகமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று!

:)

ராசராசசோழன் said...

நான் கூட 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║...

Post a Comment

Related Posts with Thumbnails