அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, May 31, 2010

மனஇறுக்கம்...


அது தொலைத்த
நிமிடங்கள்....
கொஞ்சம் நஞ்சம் அல்ல...

கிரகண சந்திரன் போல்...
மனதில் அது நிரப்பிய
கலக்க இருள்
கொஞ்சம் நஞ்சம் அல்ல...

மனதினை இறுக்கி...
உணர்வுகளை காயப்படுத்தி...

சே,வாள்ளஸ்
நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்
அனைவரையும் இது
இப்படிதான்
செய்திருக்குமோ....

நெருங்காதே நகர்ந்து செல்...
ரணங்களை தாங்கி..
நொடிகளில் சுவசிப்பவர்கள்...
இல்லாத துயரங்களில்
மனதை தைக்க...
இருக்கும் நிமிடங்களை
இழக்க தயாரில்லை..
   

Tuesday, May 4, 2010

பழனி பாத யாத்திரை...பயணம்... கொஞ்சம் காமெடி கூட... பயணம்-2

அப்படி இப்படினு ஒரு வழியா பத்து நாள் நடந்து பழனி வந்து சேர்த்தோம் மலை ஏற எல்லாம் தயாரா இருந்தாங்க... எனக்கா குதி காலில் தாங்க முடியாத வலி என்ன என்ன தவறு செய்தேனோ எல்லாம் கண்ணு முன்னாடி வந்துவிட்டு போச்சு... ஐயோ.. மலை ஏறலன பெரிய அசிங்கமா போய்டுமேனு ரொம்ப பீல் பண்ணி முருகன் கிட்ட வேண்டிகிட்டேன். ஒரு பத்து நிமிஷம் போச்சு கொஞ்சம் கொஞ்சம்மா வலி கொறைஞ்சது இதுல பெரிய விஷயம் என்னனா முருகன் உடனே மன்னுச்சுட்டாரு பாருங்க...என்ன தான் இருந்தாலும் நான் சின்ன பையன் தானே...

அந்த பயணத்த மனசுல வச்சுகிட்டு இப்ப போயிட்டு வரலாம்னு மாலைய போட்டாச்சு...ஏற்கனவே பல தவறுகள் செஞ்சு மலை ஏற முடியாம முருகன்கிட்ட புலம்புனது ஞாபகம் இருந்ததனால ரொம்ப ரொம்ப கவனமா விரதம் இருந்தேன். அந்த நாள் வந்துச்சு... திண்டுக்கல்ல இருந்து நடக்கிறதா முடிவு பண்ணி... நான் என் தம்பிக ரெண்டு பேரு அப்பறம் எங்க அப்பா அம்மா...எல்லாம் கிளம்பி திண்டுக்கல் வந்தாச்சு...

அனைவரும் அங்க இருந்த விநாயகர் கோயில்ல சாமிகும்பிட்டு எங்க பாதயாத்திரையை தொடங்கி ஐந்து நிமிசம் கூட ஆகல ஒரே வலி கால்ல... என்ன பிரச்சனைனா அப்பதான் புதுசா ரோடு போட்டுருகாங்க... அது மெயின் ரோடு வேற... ஓரம்மாத்தான் நடக்க முடியும்...அங்கபாத்து ரோடுக்கு போடுற சிமிண்டு ஜல்லி...சும்மா சொல்லகூடாது...ஊசிய ரோடு புல்லா நட்டுவச்ச மாதிரி ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியல... எங்க அம்மாவும் சின்ன தம்பியும் வேக வேகம முன்னாடி போக...மீதி மூனு பேரும்...கொஞ்சம் கொஞ்சம்மா பின்னாடி போய்கிட்டிருந்தும் அவங்க வேகத்துக்கு... நான் ஒரு மைல் கல்லையும் விடவில்லை...எல்லா மைல்க்கல்லிலையும் உட்கார்ந்து ஓய்வு எடுத்து சாதனை செய்தேன்...

தொடருங்க...

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!!! இது நயன்தாரவின் ஆதங்கம்..


இது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது... அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்... அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்... ஆனால் இன்றைக்கு இருக்கும்  நயன்தாரவை வைத்து எந்த படமும் எடுக்க முடியாத அளவிற்கு பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி கொண்டு... எந்த இயக்குனர் பொறுத்துக்கொள்வார்.

அங்காடி தெரு அஞ்சலி... படத்தை பற்றி அவருக்கு எந்த கவலையும்  இல்லை ஏற்கும் பாத்திரமே.. சிறந்தது என்று மிக இயல்பாய் நடித்துள்ளார் ரெட்டைசுழியில்...

மற்றவர்களை பார்த்து கேள்வி எழுப்பும் முன் தான் என்ன செய்கின்றோம் என்று உணரவேண்டும்..  ஐயா படம் பார்த்து ஒரு நல்ல நடிகை தமிழுக்கு வந்துவிட்டார் என்று இருந்தேன்... ஆனால் இன்று அவர் நிலை என்ன...

அஞ்சலி மிக நன்றாக நடிக்கிறார் கதாபாத்திரத்தை உணர்ந்து...அவரும் நயன்தரா போல் ஆகிவிடக்கூடாதென்பதே என்னுடைய ஆசை....

மனதில்பட்டது....

Monday, May 3, 2010

காந்தி தேசமே....உனக்கு கண் இல்லையா...சிங்களவனே...உனக்கு நெஞ்சில் ஈரமில்லையா


மனதை பாதித்த ஈழத்து கவிதை...
http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html

நேற்றைய அவளுடைய சாவு 
எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய்விட்ட 
உணர்வுகளுக்குள்
அதிர்ந்துப் போதல் 
எப்படி நிகழும்?

அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே, வாருங்கள்
உடைகளை கழற்றி
உங்களை 
நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் அம்மாவே 
உன்னையும் தான்!
சமாதானத்திற்காய் போரிடும்?
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள்
யோனிகளைத் திறவுங்கள்...

பாவம்,
அவர்களின் வக்கீரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்?
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத்
தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா நின்று விடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே,
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி,
அள்ளிப் புதையுங்கள்.
இனிமேல் எம்மினம்
தளிர் விடமுடியாதபடி.

சிங்களச் சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு 
இப்போது தேவையில்லை.

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 6காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 5


மீண்டும் ஒரு அதிகாலை பயணம்...ஒரு புதிய நாள்... நல்ல நாளும் கூட இன்று அவள் பிறந்த நாள்... மாசி மாதத்தின் மூன்றாம் வாரம் பிறந்தவள் எனக்கு நான்கு நாட்கள் முன்னால பிறந்துவிட்டால்...வருடம் மட்டும் வேறு...பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே பல கற்பனைகள்...என்ன உடையில் வருவாள்...  எந்த கோவிலுக்கு போயிருப்பாள்...இன்று வருவாளா...மாட்டாளா... ஒரு விதமான படபடப்பு... நிமிடங்கள்...ஒரு வழியாய் கழிந்தது... நூலகத்தின் கதவோரம் போட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன்... ஆர்வகோளாறில் வெகு சீக்கிரம் வந்துவிட்டேன். ஒரு மூடிய வகுப்பறையில் அதிகாலை தொடங்கும் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. நான் காத்துக்கொண்டிருந்தேன் அவளுக்காக நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணித்துளிகளாய் கரைந்துகொண்டிருந்தது.

நேற்று நடந்த விடயங்களை மனது அசைபோட துவங்கியது உள்ளுக்குள் ஓடிய காதல் நிகழ்வுகள் அந்த அதிகாலையில் யாருமற்ற தனிமையில் ரம்மியமாக இருந்தது. நேற்று நடந்தது...இதுதான்... எங்கோ ஒரு மூலையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத இடத்தில் அமர்ந்து கணிப்பொறியில் "C" மொழியில் ஒரு பாடத்தினை பழகிக்கொண்டிருந்தேன் ஆய்வு கூடத்தில்.  இதில் நண்பர்களுக்குள் போட்டி வேறு யார் முதலில் முடிப்பது என்று.. அன்று ஏனோ அவள் தாமதமாக வந்திருக்கிறாள் வந்தவள் என்னை காணத வெறுப்பில் கணிபொறி ஆய்வு கூடத்தின் வாசலில் நான் உள்ளே இருப்பது கூட தெரியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். பிறகு என்ன நினைத்தலோ ஆய்வு கூடத்தின் உள்ளே வந்தவள் சரியாக வேலை செய்யாத ஒரு கணிப்பொறியில் அமர்த்து எதோ செய்துகொண்டிருந்தால்... அந்த நிமிடம் தான் நான் அவளை பார்த்தேன் அன்று என்னவோ தெரியவில்லை ஆய்வு கூடம் நிரம்பி வழிந்தது மாணவ மாணவிகளால் . அவள் வெறுப்பின் உச்சியில் இருந்தது அவள் முகத்தில் கண்ணாடியாக பிரதிபலித்தது. நான் அவளை நோக்கி கையை நீட்டியது தான் தாமதம்... திரும்பி ஒரு முறை முறைத்தாள்...இதயம் வலித்தது...நொறுங்கிப்போனேன்...

என்னுடன் உட்கார்திருந்த மூன்று நண்பர்களை நகர சொல்லி அவளை நோக்கி வந்தேன்... அவளை நெருங்கி அவள் பெயரை சொல்லி அழைத்தேன்... தவறு என்னுடையது தான் அவள் இல்லாமல் நான் என்றுமே ஆய்வு கூடத்தில் நுழைந்தது இல்லை ஆனால் அன்று  நண்பர்களுக்கிடையே நடந்த போட்டி என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது. அவள் பேசவில்லை நான் அருகில் அமர்ந்தேன்...எப்பவும் அவள் அருகில் உட்காரும் போது இருப்பதை விட இன்று என் உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவிட்டது...அவளிடம் இருந்து வந்த வாசமா...இல்லை அவளை காயபடுத்திவிட்டோம் என்கின்ற குற்றஉணர்ச்சியா எதுவென்று புலப்படவில்லை.

கணிபொறியில் இணைத்துள்ள விசைப்பலகை ஒழுங்காக இணைக்கபடாமல் இருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதை சரி செய்தேன் ஆனால் சரியாகவில்லை...கணிப்பொறியுடன் நான் போட்டுகொண்டிருக்கும் சண்டையை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை...ஒரு வழியாய் அதை சரிசெய்து கொடுத்துவிட்டு "sorry" என்றேன்.. ஒரு பதிலும் இல்லை...

அவளுடைய கோபத்தில் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது "மன்னிக்கமாட்டாயா உன் மனமிரங்கி"... ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை... முதல் முதலாக என் மேல் கோபப்படுகிறாள்... கோபத்தில் அவள் முகத்தை பார்த்தபொழுது எனக்கு கோபம் வரவில்லை...எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை அந்த உணர்வுகளை... முயற்சிக்கிறேன். 

"உன் கோபத்தில் நான் சாந்த நிலவாகி போனேன்...
உன் மனச்சூடு தாங்காமல் முகிலாய் முகிழ்ந்தேன்... 
இனியவளே!!! என் இயல்பை மாற்றிவிடாதே...  
உன் சுவாசக்காற்றின் வாயுத்துகள்கள்..
என் விலாசம் தேடி வந்து இம்சிக்கின்றன "

தொடரும்... 

Sunday, May 2, 2010

எல்லை இல்லா... தரூர்...


ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி - கவிதை பிறந்த காரணம் 

நெஞ்சு பொறுக்குதில்லை...
தப்பு செய்தால்...அறியாமல்...
மன்னிக்கலாம்...
இவரோ தவறு செய்திருக்கிறார்...தெரிந்தே...

இவர்கள் எப்போதுமே சரியாக...
தண்டிக்கபடுவதிலை...
இவர்கள் தண்டனையை அனுபவிப்பது... கழிப்பது...
பொது சனங்களே.

ஊழல் புகார்...பதவி இழப்பு...புது பதவி...
கட்சியில் இருப்பதால் இவர்கள்... எல்லாம் கடந்தவர்கள்...
ஆமாம்.. எல்லை இல்லா ஊழல்...எல்லை இல்லா பதவி...
எல்லை இல்லா அதிகாரம்...எல்லை இல்லா பணம்...
மக்களை நிறுத்திவிடுகின்றனர்...வறுமையின் எல்லையில்...

பி.கு. மேலே உள்ள படம் இந்தியாவின் ஊழல் பற்றிய அகவரிசை(Index).Saturday, May 1, 2010

முடியல.... காங்கிராஸ் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சிகள் வெல்ல முடியாது-கார்த்திக்சிதம்பரம்

ஒரு கட்சில ஒம்பத்திரெண்டு தலைவரு...  இந்த லட்சணத்தில... பல காலமா திராவிட கட்சி மேல சவாரி பண்ணியே அரசியல் நடத்தியாச்சு... ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன கிழிக்கபோறீங்க... கருணாநிதியும் ஜெவும் மிச்சம் வைத்திருக்கிற... இருக்கா இல்லையானு தெரியல... அதையும் கொள்ளை அடிப்பீங்க... ஒங்களுக்கு என்ன சார் குறைச்சல் இளவரசன் கணக்கா வாழ்க்கை வாழ்றீங்க...இந்தியாவே... உங்களுக்கு சொந்தம்... கொஞ்சம் நஞ்சம் தமிழருக்கு இருந்த உணர்ச்சியையும் திராவிட இனம்னு கருணாநிதி போட்ட வேசத்தில இன்னைக்கு வரைக்கும் யாரும் எழுந்திருக்க முடியல...

இப்ப கடுமையான விவாதம் நடந்துக்கிட்டிருக்கும் அறிவாலயத்துல...அடுத்த தேர்தல்ல மக்களை எப்படி தெளிய தெளிய வயத்துல அடிக்கலாம்னு...முதல்ல காங்கரஸ் ஆட்சி நடக்குற மாநிலத்துல கவனம் செலுத்துங்க...அத விட்டுட்டு எவனப்பாத்தாலும்... ஆட்சிய பிடிப்போம் ஆட்சிய பிடிப்போம்னு அறிக்கை விடறதும் மேடைல கூவறதும் ....இதே வேலைய போச்சு...  உழைக்கும் மக்களுக்கு ரெண்டு பக்கமும் பிரச்சனை ஒன்னு முதலாளிங்க...இன்னொன்னு இந்த அரசியல்வாதிங்க... நாட்டுக்கு கேடு தர இலவசத்தை நிறுத்தனும் முதல்ல... வேலைய கொடுங்கடான்னு சொன்ன T.V தருகிறார்கள்...இப்ப ஒட்டுக்கு பணம் வேற...  என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் எப்ப பார்த்தாலும் தேர்தல் பத்தி தான் பேச்சு... இவங்களுக்கு பணம் பிரச்சனை இல்லை... அதிகாரம் அந்த காரத்துக்கு தான் அலையா அலைரானுங்க...


பழனி பாத யாத்திரை...பயணம்... கொஞ்சம் காமெடி கூட...

சின்ன வயசுல எங்க அப்பாத்தா, ஐயா,அப்பா கூட போயிஇருந்தேன்... நல்ல சந்தோஷமான பயண அனுபவம்... டிசம்பர் குளுருல போயிட்டு வந்த நினைவுகள் அப்படியே இருக்கு அப்ப எனக்கு 16 வயசு இருக்கும் காலை மாலை குளிக்கணும் அது ஒரு பெரிய பிரச்சனை... மாலை கூட பரவாயில்லை காலை தான் தொல்லை 5 மணிக்கு எங்க அப்பா எழுப்பி விடுவாரு ஆமாம் அவரும் மலைக்கு மாலை போடிருந்தாரு...  48 நாளு மிக கடுமையான விரதம் நான் இல்லை எங்க அப்பா.. நான் என்ன.. என்ன.. கோல்மால் செய்தேன்னு எனக்கு தான் தெரியம்... எங்க அம்மாவுக்கு நான்னா கொஞ்சம் பாசம் அதிகம்... அது போதாதா மூத்த பையன் வேற... என் அப்பா மட்டும் விரதம் இருக்க நான் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலில் போய் விரதத்தை முடித்துவிடுவேன்... முருகன் தப்பா எடுத்துக்கமாட்டார் சின்ன பையன் தானே....

அப்பறம் ஒரு பெரிய தொல்லை பொண்ணுங்க... எப்படிங்க அந்த வயசுல பாக்க கூடாதுன்னா.. முடியல... முருகனே ரொம்ப பீல் பண்ணிருப்பார் என்னோட சாரிய கேட்டு கேட்டு... அந்த கதைய விடுங்க... பழனிக்கு அப்ப போனது உண்மையாவே நல்ல அனுபவம்... ரோட்ல தூங்கி...ரோட்லயே சாப்பிட்டு..ரோட்டோராமா இருகிற குட்டைல குளிச்சு.. சில சமயம் பம்ப்பு செட்ல குளிச்சு... குன்றகுடில இருந்து பழனி வரைக்கும் அப்ப இருந்த சுமார் ரக ரோடுகள்...இருபக்கமும் பச்சை பச்சை என வயல் வெளியா சில சமயம் மட்டாந்தரையா சில சமயம்... காய்ந்து போன கிழக்கு தொடர்ச்சி மலையின் எச்சங்கள்... சும்மா சொல்ல கூடாது....அருமையான நினைவுங்க எழுதும் போதே சுகமா இருக்கு...

புதிதா ஆரம்பிச்ச பதிவா... நிறைய விஷயம் இருக்கு....இந்த இங்கிலீஷ்ல இருந்து தமிழா மாத்துவததுக்குள்ள தாவு தீந்திருது ("மாத்துவததுக்குள்ள" இத அடிக்க இது வருது "மத்ரதுகுள்ள" முடியல... இப்பவே கண்ண கட்டுது... நிறைய இருக்குங்க... எங்கயும் போய்டாதீங்க...வெகு விரைவில் உங்கள் அபிமான RSS Feed ல பார்ப்போம்...தொடருங்க... )
      

Related Posts with Thumbnails