அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, May 3, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 6காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 5


மீண்டும் ஒரு அதிகாலை பயணம்...ஒரு புதிய நாள்... நல்ல நாளும் கூட இன்று அவள் பிறந்த நாள்... மாசி மாதத்தின் மூன்றாம் வாரம் பிறந்தவள் எனக்கு நான்கு நாட்கள் முன்னால பிறந்துவிட்டால்...வருடம் மட்டும் வேறு...பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே பல கற்பனைகள்...என்ன உடையில் வருவாள்...  எந்த கோவிலுக்கு போயிருப்பாள்...இன்று வருவாளா...மாட்டாளா... ஒரு விதமான படபடப்பு... நிமிடங்கள்...ஒரு வழியாய் கழிந்தது... நூலகத்தின் கதவோரம் போட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன்... ஆர்வகோளாறில் வெகு சீக்கிரம் வந்துவிட்டேன். ஒரு மூடிய வகுப்பறையில் அதிகாலை தொடங்கும் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. நான் காத்துக்கொண்டிருந்தேன் அவளுக்காக நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணித்துளிகளாய் கரைந்துகொண்டிருந்தது.

நேற்று நடந்த விடயங்களை மனது அசைபோட துவங்கியது உள்ளுக்குள் ஓடிய காதல் நிகழ்வுகள் அந்த அதிகாலையில் யாருமற்ற தனிமையில் ரம்மியமாக இருந்தது. நேற்று நடந்தது...இதுதான்... எங்கோ ஒரு மூலையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத இடத்தில் அமர்ந்து கணிப்பொறியில் "C" மொழியில் ஒரு பாடத்தினை பழகிக்கொண்டிருந்தேன் ஆய்வு கூடத்தில்.  இதில் நண்பர்களுக்குள் போட்டி வேறு யார் முதலில் முடிப்பது என்று.. அன்று ஏனோ அவள் தாமதமாக வந்திருக்கிறாள் வந்தவள் என்னை காணத வெறுப்பில் கணிபொறி ஆய்வு கூடத்தின் வாசலில் நான் உள்ளே இருப்பது கூட தெரியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். பிறகு என்ன நினைத்தலோ ஆய்வு கூடத்தின் உள்ளே வந்தவள் சரியாக வேலை செய்யாத ஒரு கணிப்பொறியில் அமர்த்து எதோ செய்துகொண்டிருந்தால்... அந்த நிமிடம் தான் நான் அவளை பார்த்தேன் அன்று என்னவோ தெரியவில்லை ஆய்வு கூடம் நிரம்பி வழிந்தது மாணவ மாணவிகளால் . அவள் வெறுப்பின் உச்சியில் இருந்தது அவள் முகத்தில் கண்ணாடியாக பிரதிபலித்தது. நான் அவளை நோக்கி கையை நீட்டியது தான் தாமதம்... திரும்பி ஒரு முறை முறைத்தாள்...இதயம் வலித்தது...நொறுங்கிப்போனேன்...

என்னுடன் உட்கார்திருந்த மூன்று நண்பர்களை நகர சொல்லி அவளை நோக்கி வந்தேன்... அவளை நெருங்கி அவள் பெயரை சொல்லி அழைத்தேன்... தவறு என்னுடையது தான் அவள் இல்லாமல் நான் என்றுமே ஆய்வு கூடத்தில் நுழைந்தது இல்லை ஆனால் அன்று  நண்பர்களுக்கிடையே நடந்த போட்டி என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது. அவள் பேசவில்லை நான் அருகில் அமர்ந்தேன்...எப்பவும் அவள் அருகில் உட்காரும் போது இருப்பதை விட இன்று என் உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவிட்டது...அவளிடம் இருந்து வந்த வாசமா...இல்லை அவளை காயபடுத்திவிட்டோம் என்கின்ற குற்றஉணர்ச்சியா எதுவென்று புலப்படவில்லை.

கணிபொறியில் இணைத்துள்ள விசைப்பலகை ஒழுங்காக இணைக்கபடாமல் இருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதை சரி செய்தேன் ஆனால் சரியாகவில்லை...கணிப்பொறியுடன் நான் போட்டுகொண்டிருக்கும் சண்டையை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை...ஒரு வழியாய் அதை சரிசெய்து கொடுத்துவிட்டு "sorry" என்றேன்.. ஒரு பதிலும் இல்லை...

அவளுடைய கோபத்தில் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது "மன்னிக்கமாட்டாயா உன் மனமிரங்கி"... ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை... முதல் முதலாக என் மேல் கோபப்படுகிறாள்... கோபத்தில் அவள் முகத்தை பார்த்தபொழுது எனக்கு கோபம் வரவில்லை...எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை அந்த உணர்வுகளை... முயற்சிக்கிறேன். 

"உன் கோபத்தில் நான் சாந்த நிலவாகி போனேன்...
உன் மனச்சூடு தாங்காமல் முகிலாய் முகிழ்ந்தேன்... 
இனியவளே!!! என் இயல்பை மாற்றிவிடாதே...  
உன் சுவாசக்காற்றின் வாயுத்துகள்கள்..
என் விலாசம் தேடி வந்து இம்சிக்கின்றன "

தொடரும்... 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails