அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Wednesday, June 30, 2010

நிழல் கொடுத்தாள் நிலவு மகள்...


நிழல்களை பார்த்து
நிஜமென்றிருந்தேன்...
கதிரவன்
மறைந்ததும்
நிழல் ஏது...
நிஜம் ஏது...

திரும்பவும்
நிழல்...
கடன் கொடுத்தான்
கதிரவன்...
நிழல்
கொடுத்தாள் நிலவு மகள்...
எது நிஜம்..இங்கே!
கதிரவனும் எய்கின்றான்..
சொல்லவேண்டாம் நிலவை பற்றி...

Tuesday, June 29, 2010

வெற்றுத் தாளில் வெள்ளை எழுத்துகள்...

வெற்றுத் தாளில்
வெள்ளை எழுத்துக்கள் 
நான் 
எழுத தொடங்கும் வரை...

ஒரு 
எழுத்து தவறாமல்
அப்படியே
வந்ததிங்கே...
மையின் நிறம் மட்டும் 
என் பங்கு...
மற்றவை புரியவில்லை... 

மிச்சமின்றி இறக்கியவுடன்
நினைவு வெற்றிடத்தில் 
இறந்த கால
நிகழ் கால
எச்சங்கள்...
உடனடியாய் 
நிரம்பிக்கொள்ளும்...

மீண்டும் மீண்டும் 
எழுதுகிறேன்...
வெள்ளை எழுத்துகள் 
என் 
பேனா மைப்பட்டு
நிறம் மாறும்...

நினைவு ரேகைகளின்
நகலாய்  
வெள்ளை தாளில்...
வெள்ளை எழுத்துகளில்...

நிச்சயம்...
என் பங்கு 
எதுவும் இல்லை...
என் பெயரை போடாதீர்...

Monday, June 28, 2010

அழகாய் மனிதர்கள் செதுக்கிய ஓவியம்...

வயலோர வரப்புகள்,
அது அழகாய்
மனிதர்கள்
செதுக்கிய ஓவியம்...
அதோ அந்த
மலை முகடு,
அதை ஒட்டிய
மாலை நேர சூரியன்...
சிறு சாரலாய்
சன்னல் நனைக்கும்
கோடை மழை...
யாருக்கும்
அடங்காத,
ஆதி அந்தம்
தெரியா இருப்புப்பாதை...
பனம் பழம்
விற்ற பாதையோர
சிறுவர்கள்...
இனி 
எப்போது வாய்க்கும்
இனிய
இந்த
மாலை நேர
பேருந்து பயணம்...
நினைவுக்குள்
நிழலாடும்
அடங்காத
ஆசை இது...
தூர தேச
தமிழர்களின்
விழி  ஏங்கும்
கனவு இது...

Sunday, June 27, 2010

ஏன் தாயே... இப்படி செய்தாய்...

தாயே...
என்
வயிற்றுப் பசியை
உன் 
உடலை விற்றுப் 
போக்கினாய்...
நான்
என்ன பாவம்
செய்தேன்...
தினம் தினம்
பூக்கும்
இரவுகளில்
நான் சருகாய்
உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
மற்றவர்களின்
உடல் பசிக்கு...

யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
இது
சான்றோன் மொழி...
நீ
பட்ட துன்பத்தை
எனக்கல்லவா...
பரிசளித்து விட்டாய்...
காம மிருகங்களின்
நகம் பட்ட காயங்கள் ...
நெருக்கி இம்சித்தவனின்
பிடிக்காத முத்தங்கள்...
மெல்லிய பெண்மையினை
வாட்டிவதைத்த நிமிடங்கள்...
என் வாழ்வை
தொலைத்தவளே...
இது தானா 
உன் ஆசை...

நித்தமும்
ஒரு
காதல் கதை
என்
செவி வழியே
வழுக்கிச்  செல்லும்...
அதை
ஒரு நாளும்
உணராவண்ணம்
ஏன் தாயே...
இப்படி செய்தாய்...

முழு இரவு
விழித்திருந்து
பலர் காமம்
தீர்க்கின்றேன்...
எனக்கென்று
ஒர்
இரவு
ஒர் நாளும்
வாராதோ...
கல்லறை நோக்கி
எந்தன்
இரு விழியும்
தவிக்குதம்மா...

நேற்றொருவன் 
நெருக்கத்திலே
"தேவிடியா" என்று சொன்னான்..
அதற்கு முன்பு 
இன்னோருத்தன்
"என் கண்மணியே" என்று சொன்னான்...
நான்
உடல் விற்றேன்
என் உயிர்
பசி மறக்க.. 
அவன்
வார்த்தை விற்றான்
தன் காமப்
பசி போக்க...
அர்த்தமற்ற வார்த்தைகளை
தினமும் 
நான் அள்ளுகிறேன்...
என் 
படுக்கையறை நாற்றத்திலே...

Saturday, June 26, 2010

சுந்தரம்... (முழுப்பகுதி)சுந்தரத்தின் கையில் ஒரு நாவல்... வெகு நேரம் கீழே வைக்காமல் படித்துக்கொண்டிருந்தன்...கதை மாந்தர் அவன் மன உணர்ச்சிகளை மாறி மாறி ஆக்கிரமித்து கொண்டிருந்தனர்.  தொலைவில் அவன் அம்மா நூல் புடவையில் ஒட்டு தையல் போட்டு வறுமைக்கு விளம்பரம் செய்து கொண்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தால் காலம் தின்ற அவள் இளமை, வறுமை தின்ற அவள் பொறுமை காட்டு கத்தலாய் வெளிப்பட்டது அவன் நாவல் படித்துக்  கொண்டிருப்பதை பார்த்து. அவன் எப்போதுமே கவனமாக தான் இருப்பான் அம்மாவுக்கு தெரியாமல் நாவல் படிப்பதில். இன்று தான் கோட்டைவிட்டுவிட்டான்.  அடுத்த அரைமணி நேரம் அவன் வாங்காத திட்டு இல்லை...

"சுந்தரம், இந்த பணத்த கொண்டுபோய் கவி அம்மாகிட்ட கொடுத்துட்டு வாடா" என்றால் சுந்தரத்தின் தாய் திட்டி ஓய்ந்த களைப்பில்.

கிராமத்தின் கிழக்கு மூலையில் இருந்தது கவிதாவின் வீடு. சுந்தரத்திற்கு கவிதாவை ரொம்ப பிடிக்கும். இருவருமே சுஜாதாவின் தீவிர ரசிகர்கள். போட்டி போட்டு கொண்டு இருவரும் படிப்பார்கள்,ரசிப்பார்கள்,விவாதிப்பார்கள். அன்று அவள் ஏதோ   துவையல் அரைத்துக்  கொண்டிருந்தால், அம்மிக்கல்லில்.  கையால் தள்ளி அவள் துவையல் அரைக்கும் அழகை ரசித்து கொண்டே அவளை நெருங்கினான் சுந்தரம்.

"கவி வீட்ல அம்மா இல்லையா..." கவிதா அம்மிக்குளவியை சற்று நிறுத்தி இல்லை என்பது போல் தலையசைத்தால்.

"இந்தா  இதுல ஆயிரத்தி ஐநூறு ரூபா இருக்கு, அம்மா வந்தவுடனே கொடுத்திடு"  பையில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான். வாங்கியவள் பணத்தை எண்ணாமல் பக்கத்தில் வைத்தால்.

"சரியா இருக்கானு பார் கவி"

"இது என்ன முத தடவயா.. பரவாயில்லை சுந்தரம்" என்றவள் அவனை பார்த்து புனைகைத்தாள். 

"கவி, உன்ன ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டியே" என்றவனை கேள்வியாக பார்த்தால்.

"என்னை உனக்கு எத்தனை வருசமா தெரியும், என்னைக்காவது உன் மேல கோபப்பட்டிருக்கேனா... " என்று இழுத்தவள் "சும்மா சொல்லு சுந்தரம்" என்று முடித்தால்.

"அது இன்னைக்கு நடந்துற கூடாதுனு தான் யோசிக்கிறேன்" என்றவன் சிந்தனையில் விழுந்தான்... சற்று யோசித்தவன்...

" என் கூட வந்துடு கவி, எங்கயாச்சும் ஓடி போய்டலாம்,அந்த கிழவன் உனக்கு மாப்பிள்ளையா ...வேணாம் கவி..."  சொல்லி முடிக்கவில்லை கவிதாவின் அம்மா பிரசன்னமானால்...

"சுந்தரமா, வாப்பா அம்மா காசு கொடுத்து அனுப்புச்சா" என்றவள் கவிதாவின் அருகில் இருந்த பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தால்.

"சரியா இருக்காம்மா" என்றவன் கவிதாவை பார்த்தான் அவள் எந்த சலனமும் இன்றி தன் வேலையில் ஆழ்ந்துவிட்டால். 

"சரியா இருக்குப்பா, உள்ள வா கொஞ்சம் டீ குடிச்சிட்டு போலாம்"    என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்ல யத்தனித்தாள். ராக்கம்மா நல்லவள் தான் ஆனால் முன்கோபி சண்டை என்று வந்துவிட்டால் யார் என்று பார்க்கமாட்டால் அவ்வளவு தான் கிழி கிழி என்று கிழித்துவிடுவாள் அதனால்  முடிந்தவரை அவளை யாரும் நெருங்க மாட்டார்கள்.     

"இல்லம்மா, இன்னொரு நாள் வரேன்"  கவலையை  பெருமூச்சாய் வெளியேற்றி அங்கிருந்து தப்பித்தான்.

கவிதாவை அந்த ஊர் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். அவள் அம்மாவை போல  அதிர்ந்து பேச மாட்டாள். அவள்  மேல் அந்த ஊர் காட்டும் அன்புக்கு  ,அவள் தந்தையை இழந்தவள் என்பதும் ஒரு காரணம். சுந்தரத்திற்கு அவள் மேல் காதல் இல்லை ஆனால் இதயத்தின் ஒரு ஓரத்தில் அவள் நினைவுகளை சேமித்துக்கொண்டிருகிறேன். அவளை ஒரு வயதானவருக்கு திருமணம் செய்ய அவள் அம்மா எடுத்த முடிவு... நடந்த நிச்சயம் அனைத்தும் அவனை தடுமாறவைத்தது. அளவுக்கு அதிகமாய் அவளை பற்றிய நினைவுகளால் நிம்மதியிழந்தான்.

"ஏய் சுந்தரம் நில்லுடா" அவன் நண்பன் ரவி 

சுந்தரம் நிற்பதாக தெரியவில்லை சற்று ஓங்கி அழைத்தான். ஒரு வழியாய் அவன் நினைவுகள்  நிகழ்காலத்திற்கு தரையிறங்கியது. ரவியை பார்த்து தலையசைத்தான் அதற்குள் ரவி அவனை நெருங்கிவிட்டான்.

"டேய், என் நண்பன் சென்னைல இருந்து வந்திருக்கான்டா...அவனோட சொந்தக்காரர்  அலுவலகத்தில ஆளு வேணுமா உன் ஞாபகம் வந்துச்சு உன்னை பத்தி சொன்னேன்...உடனே வர சொல்லி இருக்காங்க, இந்தா  அவங்க விலாசம், தொலைபேசி எண்ணும் இருக்கு, போறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட பேசிடு " என்றவன் ஒரு சிறு காகிதத்துண்டை அவனிடம் நீட்டினான். சுந்தரம் உணர்ந்து நன்றி தெரிவிக்கும் முன்னே நடையை கட்டிவிட்டான். 

சென்னையின் வெயில் சுந்தரத்தை பாடாய்படுத்தியது ஆனால் அலுவலகம் முழுதும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டு இருந்ததால் சமாதானப்படுதிக்கொண்டான். அவன் கிராமம் தமிழகத்தின் தென்கோடியில் இருந்தாலும் இந்த அளவு வெயில் அவன் அனுபவித்தது கிடையாது. அலுவலகத்தில் அறிமுக படலம் முடிந்து தனக்குரிய ஆசனத்தில் வந்து உட்கார்ந்தான். தன் தந்தை இறந்த பிறகு அம்மா பட்ட கஷ்ட நஷ்டங்கள் அவன் கண் முன் வந்து போனது கூடவே கவிதாவின் நினைவுகளும் கவலையை அப்பிப்போனது. ஒரு வாரம் அப்படி இப்படி என்று கழிந்தது. முதல் வாரம் என்பதால் வேலையும்  அதிகம் இல்லை.

"அம்மா, நல்லா இருக்கியா" புதிதாய் வாங்கிய கைபேசியில் இருந்து முதல் தொடர்பு.

"நல்ல இருக்கேன் சுந்தரம்,  நீ எப்படிப்பா இருக்க" குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"நல்ல இருக்கேன்மா, ஏன்மா  என்னமோ போல பேசுற உடம்பு சரியில்லையா" வார்த்தையில் பரிதாபம் கூடி இருந்தது. "இனி எதுக்கும் கவலைப்படாதேமா, நான் இருக்கேன்" சொல்லி முடிக்கவில்லை அவன் அம்மா உள்ளம் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டால். இவன் எவ்வளவோ முயன்றும் அவள் நிறுத்துவதாய் தெரியவில்லை.

"ஏன்மா என்ன ஆச்சு, சொல்லிட்டு அழு" சற்று சத்தமாய் சொல்லவே உடைந்த குரலில் பேச ஆரம்பித்தால்.

"ராக்கம்மா நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டா சுந்தரம், நேத்துல இருந்து கவிய காணல,  ஊரே அமளிய இருக்கு. அந்த பொண்ணு உன் கிட்ட தான் அதிகமா பேசுனு ஊரே உன்னை சந்தேகப்படுதுப்பா"

விசயத்தின் சூடு காது வழியே இதயத்தில் பரவியது, 


"என்னமா சொல்லற, கவிய காணோமா" என்றவன் சிந்தனையில் இருந்து விடுபடுவதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

மீண்டும் பல முறை தொடர்பு கொண்டான் ஆனால் பயனில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, விடுப்பு கேட்கலாம் என்றால்...என்னவாகிருக்கும்...எங்கு சென்றிருப்பால்...எண்ணங்கள் சுழன்று அடித்தன அவனுக்கு. அந்த நேரம் பார்த்து அவன் மேலாளர் அந்த பக்கம் வந்தார் இவன் முகத்தை பார்த்ததுமே அவருக்கு ஏதோ உணர்த்திருக்கும் போல.. 

"என்ன ஆச்சு சுந்தரம், உடம்பு சரியில்லையா" என்றவர் அவனை நெருங்கி வந்து அமர்ந்தார்.

"இல்ல சார், நல்ல தான் இருக்கேன்" என்றவன் 

"சார் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன், போகட்டுமா" என்றான் கம்மிய குரலில். அந்த நேரம் பார்த்து அலுவலக உதவியாளன் அவர்களை நோக்கி வந்தான்.

"சுந்தரம் சார், உங்கள பாக்க ஒருத்தர் வந்திருக்கார், வந்துடுங்க" என்றவன் நான்கு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த நபரை நோக்கி சென்றான்.  இப்படி தான் நேற்று மூன்றாவது தளத்தில் உள்ள சுந்தரத்திற்கு பதிலாக இவனிடம் வந்து சொல்ல இவன் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது இவனை பார்க்க அந்த நபர் வரவில்லை என்கின்ற  விஷயம்... பத்து நிமிடம் வீணாய் போனது தான் மிச்சம். உதவியாளன் வேகமாய் நகர்ந்து போய்விட்டதால் வேறு வழி இல்லாமல் மேலாளரிடம் ஒரு மன்னிப்பை கொடுத்துவிட்டு வரவேற்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அங்கே பார்த்தால்...

புதுமணத்தம்பதிகளாய் ரவியும் கவியும்...கவியின் கழுத்தில் புதிதாய் கட்டிய தாலி பளபளத்துக் கொண்டிருந்தது. சிந்தனை புயலில் சிக்கி சின்னாபின்னம் ஆனவன் தன் நிலை வர சில நொடிகள் பிடித்தது.

வேகவேகமாய் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தவன் "வாழ்த்துக்கள் ரவி" என்று புன்னகை ஒட்டிய முகத்தோடு கவிதாவை பார்த்தான்.

"போன நாச்சியம்மன் திருவிழாவில் இருந்து கவியும் நானும் காதலிக்கிறோம், சுந்தரம்...என் அப்பா மேல இருந்த பயத்தால உங்கிட்ட கூட சொல்லல எங்களுக்கு வேற வழி தெரியல...கொஞ்சம் கூட யோசிக்க நேரம் கொடுக்காம எல்லா காரியமும் நடந்துடுச்சு" என்றவன் ஆதரவாக சுந்தரத்தின் கைகளை பிடித்தான். "உனக்கே தெரியும் எங்க குடும்பத்தை பத்தி என் அப்பாவ சமாளிக்காம நான் கல்யாணம் பண்ண முடியாத நிலைமை, வேறு வழி தெரியலடா..உன்ன தான் மலையா நம்பி வந்திருக்கேன்" என்று புதிர் முடிச்சு போட்டான் வார்த்தைகளில்.

அவர் போற்றும் சாதியை விட்டு பார்த்தால் ரவியின் அப்பா மிகவும் நல்லவர். அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு பெற்றவர் ஆனால் அதையும் தாண்டி சாதி சங்கத்தில் கிடைக்கும் பதவிக்கு புளகாங்கிதம் அடைபவர் தாழ்ந்த சாதி பெண்ணை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமட்டார். இதுவெல்லாம் சுந்தரத்திற்கு நன்றாக தெரியும் ஆனால் ரவி எதிர்பாக்கும் உதவி என்னவென்பதே இப்போதைய நெருடல்...அவன் உணர்ச்சி கடலில் ஒரு புயல் ஓயும் முன்னே அடுத்த புயல் வீச ஆரம்பித்தது.

"என்னனு சொல்லு ரவி, முடிந்ததை கண்டிப்பா செய்றேன்" அவன் ஆதரவை வார்தையினில் கட்டினான். கவியின் பார்வையிலோ, உடல் மொழியிலேயோ  சுந்தரத்தினால் எதையும் அறியமுடியவில்லை அமைதியான கடல் போல் அவர்களின் பேச்சைக்  கேட்டுக் கொண்டிருந்தாள்.

"கொஞ்ச நாள் கவிய உன் கூட வச்சிக்க முடியுமா, அதுக்குள்ள நான் ஊருக்கு போய் எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு வந்து கூட்டிட்டு போறேன். என் அப்பா அவல பார்த்தா கண்டிப்பா கொலயே பண்ணிடுவார், தயவு செஞ்சு மாட்டேனு சொல்லிடாதே" என்றவன் கரங்கள் சுந்தரத்தின் கையை அழுத்தியது.

ஒரு வாரம் கழிந்தது...

கைபேசியின் மணி அடித்தது..மறு முனையில் சுந்தரத்தின் அம்மா "சுந்தரம், நல்ல இருக்கியாப்பா" குரலில் அதிக சோர்வு தெரிந்தது.

"நல்ல இருக்கேன்மா,என்ன ஆச்சுமா, ரவி கிட்ட இருந்து எந்த பதிலும் வரல" கேள்வியில் கவிதாவின் சோகம் கலந்திருந்தது அவளும் ஆர்வத்துடன் இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள்.

"சுந்தரம்...சொல்றேனு தப்பா எடுதுக்காத , அந்த பொண்ணை இனியும் நீ வச்சு இருக்குறது சரியா வராதுப்பா, ரவிக்கு அவங்க அப்பா வலுக்கட்டாயமா அவங்க மாமன் பொண்ண கட்டிவச்சிட்டாரு, ஊருக்கே விஷயம் இப்ப தான் தெரியும் யார்க்கும் என்ன நடக்குதுன்னு தெரியலப்பா, இதுக்கு நடுவுல போலீஸ் வந்து உன் விலாசம் வாங்கிட்டு போனங்கப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என்றவளின் உடல் நடுக்கம் குரலில் தெரிந்தது.

எல்லா நம்பிக்கையும் இழந்த மரணதண்டனை கைதியாய் சுந்தரத்தின் மனம் அந்த நிமிடம் இருந்தது.

இவள் என் வாழ்கை பாதையில் பல ஆண்டுகள் கூட வந்தவள், இந்த நிமிடம் வரை வாழ்க்கையின் துன்பங்களை மட்டும் சுமந்து கொண்டு எந்த சலனமும் இன்றி நிர்கதியாய் என் முன்னே நின்று கொண்டிருக்கிறாள், இவள் வாழ்கை எந்த வகையிலும் வீணாகப்  போகக்  கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு பயணித்தான். பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவள் கேள்விக்  குறியாய் அமர்திருந்தால், சிந்தனையின் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு அவள் சொல்லிய காரணங்களும் அவள் சிந்திய கண்ணீர் துளிகளும் அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது. காதல் சுமையை சுமந்து கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கிளம்பியவன், காதல் தோழமையில் கரைந்து போக தன் நீண்ட கால  தோழிக்காக அவளின் நல்வாழ்கை ஒன்றே குறியாய் தன் மண்ணில் கால் வைத்தான். அவள் கூனிக்  குறுகி உயிரோடு உடலையும் அவன் பின்னே மறைக்க யத்தனித்தாள், அவன், அவள் கரம் பற்றி முகம் நிமிர்த்தி பள்ளி சிறுவன் போல் அவளை பிடித்து கொண்டு ரவியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Friday, June 25, 2010

என்னை கைவிட மட்டாயே...

நீருக்குள் உலவுகின்ற
மீனை போல...
உன் நினைவுக்குள்
உலாவிக் கொண்டிருந்தேன்...
இறுக தழுவிய
நிமிடங்கள்...
பரிமாறிய முத்தங்கள்...
தலை கோதிய
தருணங்கள்..
இன்னும்
சில பிற...
என்
நினைவு நரம்புகளை
அறுத்தது
உன் வார்த்தைகள்
"என்னை கைவிட மட்டாயே "
சிரிப்பு தான்
வருகிறது...
ஒரு வருடம்
முடியபோகிறது...
நீ அவனை
மணம் புரிந்து...

Thursday, June 24, 2010

பணம்...

நீண்ட தூரம்
நடந்தேன்
மனதின்
வலி போகவில்லை...
ச்சீ...நீங்கள்
எல்லாம்
மனிதர்களா...
பணமென்னும்
நஞ்சை உண்ண
மனித முகத்தோடு
திரியும்
விலங்குகளே...

வழி நெடுக
வரலாறுகள்
ஆனாலும்
புரியவில்லை
காசிற்கு
கொடுக்கும்
அன்பை
கொஞ்சம்
மனிதருக்கும்
கொடுத்தால் என்ன...

காற்றில்
பணம் பறக்க
அருகில்
ஒரு
பணத்தாசை
பிணம் மட்டும்....
அது
அந்நாட்டு
பணமில்லை... 
சீந்தி பார்க்க
ஒருவர் இல்லை...
பிணம் சொன்ன
கதை இது தான்...
பணம்
மட்டும்
வாழ்கை இல்லை...

Monday, June 21, 2010

ராசராசசோழனின் 50வது பதிவு...


அன்பு பதிவுலக நண்பர்களே!

என்னை பதிவுலகத்திற்கு இழுத்து வந்த வினவு வலைத்தளத்திற்க்கு என் முதல் நன்றி...எனக்கு தமிழ் வலைப்பக்கங்களில் அலாதி பிரியம் தினமும் ஒரு முறையாவது பார்க்கும் வலைத்தளம் தட்ஸ்தமிழ், வினவு, யாழ்... ஒரு முறை வினவு தளத்தில் வந்த அங்காடித்  தெரு படத்தின் விமர்சனம் படித்தேன்...அங்கிருந்த தொடர்பு இடுகையின் மூலம் "தீராத பக்கங்கள்" தளத்தின் அங்காடி தெரு விமர்சனம் படிக்கும் போது அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்கின்ற வெறியே வந்துவிட்டது.  அன்றிலிருந்து மாதவராஜின் எழுத்துக்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்...அவரது பக்கங்களில் இருந்து தான்...காமராஜ்,செ.சரவணகுமார்,ராகவன்,ஈரோடு கதிர்...என அந்த பட்டியல் நீளுகிறது...இது நான் பதிவுலக வாசகன் ஆன கதை.

செ.சரவணகுமார் அவர்களின் "மீண்டும் சவுதி அரேபியா" பதிவை படிக்கும் போது இனம் தெரியாத சோகம்...அதோடு ஒரு உந்துதல் எழுத ஆரம்பித்தேன். இன்று ஐம்பதாவது பதிவை எழுதிக்கொண்டிருகிறேன். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் எந்த பதிவை பார்த்து நான் எழுத ஆரம்பித்தேனோ அவர் தான் என் மூன்றாம் பதிவிற்கு முதலில் கருத்துரைத்தார் (சந்தேகம் இருப்பவர்களுக்கு - http://tamil-for-tamilpeople.blogspot.com/2010/04/1_15.html#comments).  
   

என் முதல் கதை "காதல் மட்டுமே....இளவயது இலவசம்..." அவரின் முதல் கருத்து இதுதான் 
--------------------------------------------மிக அருமையான எழுத்து, நல்ல நடை. இன்னும் நிறைய எழுதுங்கள் சகோதரரே.

-------------------------------------------

அன்று அவர் கொடுத்த ஊக்கமே... என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கிறது... அவருக்கு எனது முதல் நன்றி... இரண்டாவது நன்றி... காமராஜ் ஐயாவிற்கு...  

என்னுடைய மூன்றாவது நன்றி... என் வலைதளத்தை வாசித்து பார்த்து என்னை புதிய பதிவரின் முதல் பகுதியில் அறிமுகம் செய்துவைத்த அருமை நெஞ்சம்  மாதவராஜ் அவர்களுக்கு... 

அவர் கொடுத்த சான்றிதல்...

--------------------------------------------------------------
5. ராசராசசோழன்:
இவரது வலைப்பக்கம் அ..ஆ... புரிந்துவிட்டது... கற்றது கைமண் அளவு . இவரும் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். ’சராசரி மனிதன்.... கொஞ்சம் தமிழ் இன உணர்வுடன்’ என தன்னை அடையாளப்படுத்தும் இவர் நிறைய எழுதுகிறார். எழுத்தும் நடையும் இயல்பாய் இருக்கிறது. இன்னும் கூர்மை பெற வேண்டும்.
 --------------------------------------------------------------

   
என்னுடைய பதிவிற்கு வளமையான கருத்துரைகள்  வழங்கி கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி... பட்டியல் மிக நீளமானது எழுத்துகளில் அச்சிடமுடியவில்லை.... தென் தமிழகத்தின் கல்யாண பத்திரிகை போல்...(வேணும் என்கிறீர்களா).


சுந்தரம்....பகுதி- 2 (சிறுகதை) 


"சரியா இருக்குப்பா, உள்ள வா கொஞ்சம் டீ குடிச்சிட்டு போலாம்"    என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்ல யத்தனித்தாள். ராக்கம்மா நல்லவள் தான் ஆனால் முன்கோபி சண்டை என்று வந்துவிட்டால் யார் என்று பார்க்கமாட்டால் அவ்வளவு தான் கிழி கிழி என்று கிழித்துவிடுவாள் அதனால்  முடிந்தவரை அவளை யாரும் நெருங்க மாட்டார்கள்.     

"இல்லம்மா, இன்னொரு நாள் வரேன்"  கவலையை  பெருமூச்சாய் வெளியேற்றி அங்கிருந்து தப்பித்தான்.

கவிதாவை அந்த ஊர் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். அவள் அம்மாவை போல  அதிர்ந்து பேச மாட்டாள். அவள்  மேல் அந்த ஊர் காட்டும் அன்புக்கு  ,அவள் தந்தையை இழந்தவள் என்பதும் ஒரு காரணம். சுந்தரத்திற்கு அவள் மேல் காதல் இல்லை ஆனால் இதயத்தின் ஒரு ஓரத்தில் அவள் நினைவுகளை சேமித்துக்கொண்டிருகிறேன். அவளை ஒரு வயதானவருக்கு திருமணம் செய்ய அவள் அம்மா எடுத்த முடிவு... நடந்த நிச்சயம் அனைத்தும் அவனை தடுமாறவைத்தது. அளவுக்கு அதிகமாய் அவளை பற்றிய நினைவுகளால் நிம்மதியிழந்தான்.

"ஏய் சுந்தரம் நில்லுடா" அவன் நண்பன் ரவி 

சுந்தரம் நிற்பதாக தெரியவில்லை சற்று ஓங்கி அழைத்தான். ஒரு வழியாய் அவன் நினைவுகள்  நிகழ்காலத்திற்கு தரையிறங்கியது. ரவியை பார்த்து தலையசைத்தான் அதற்குள் ரவி அவனை நெருங்கிவிட்டான்.

"டேய், என் நண்பன் சென்னைல இருந்து வந்திருக்கான்டா...அவனோட சொந்தக்காரர்  அலுவலகத்தில ஆளு வேணுமா உன் ஞாபகம் வந்துச்சு உன்னை பத்தி சொன்னேன்...உடனே வர சொல்லி இருக்காங்க, இந்தா  அவங்க விலாசம், தொலைபேசி எண்ணும் இருக்கு, போறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட பேசிடு " என்றவன் ஒரு சிறு காகிதத்துண்டை அவனிடம் நீட்டினான். சுந்தரம் உணர்ந்து நன்றி தெரிவிக்கும் முன்னே நடையை கட்டிவிட்டான். 

சென்னையின் வெயில் சுந்தரத்தை பாடாய்படுத்தியது ஆனால் அலுவலகம் முழுதும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டு இருந்ததால் சமாதானப்படுதிக்கொண்டான். அவன் கிராமம் தமிழகத்தின் தென்கோடியில் இருந்தாலும் இந்த அளவு வெயில் அவன் அனுபவித்தது கிடையாது. அலுவலகத்தில் அறிமுக படலம் முடிந்து தனக்குரிய ஆசனத்தில் வந்து உட்கார்ந்தான். தன் தந்தை இறந்த பிறகு அம்மா பட்ட கஷ்ட நஷ்டங்கள் அவன் கண் முன் வந்து போனது கூடவே கவிதாவின் நினைவுகளும் கவலையை அப்பிப்போனது. ஒரு வாரம் அப்படி இப்படி என்று கழிந்தது. முதல் வாரம் என்பதால் வேலையும்  அதிகம் இல்லை.

"அம்மா, நல்லா இருக்கியா" புதிதாய் வாங்கிய கைபேசியில் இருந்து முதல் தொடர்பு.

"நல்ல இருக்கேன் சுந்தரம்,  நீ எப்படிப்பா இருக்க" குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"நல்ல இருக்கேன்மா, ஏன்மா  என்னமோ போல பேசுற உடம்பு சரியில்லையா" வார்த்தையில் பரிதாபம் கூடி இருந்தது. "இனி எதுக்கும் கவலைப்படாதேமா, நான் இருக்கேன்" சொல்லி முடிக்கவில்லை அவன் அம்மா உள்ளம் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டால். இவன் எவ்வளவோ முயன்றும் அவள் நிறுத்துவதாய் தெரியவில்லை.

"ஏன்மா என்ன ஆச்சு, சொல்லிட்டு அழு" சற்று சத்தமாய் சொல்லவே உடைந்த குரலில் பேச ஆரம்பித்தால்.

"ராக்கம்மா நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டா சுந்தரம், நேத்துல இருந்து கவிய காணல,  ஊரே அமளிய இருக்கு. அந்த பொண்ணு உன் கிட்ட தான் அதிகமா பேசுனு ஊரே உன்னை சந்தேகப்படுதுப்பா"

விசயத்தின் சூடு காது வழியே இதயத்தில் பரவியது, 

------நண்பர்களே பொறுத்தருளவும் நாளை நிச்சயம் நிறைவடையும்....

சுந்தரம்...சுந்தரத்தின் கையில் ஒரு நாவல்... வெகு நேரம் கீழே வைக்காமல் படித்துக்கொண்டிருந்தன்...கதை மாந்தர் அவன் மன உணர்ச்சிகளை மாறி மாறி ஆக்கிரமித்து கொண்டிருந்தனர்.  தொலைவில் அவன் அம்மா நூல் புடவையில் ஒட்டு தையல் போட்டு வறுமைக்கு விளம்பரம் செய்து கொண்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தால் காலம் தின்ற அவள் இளமை, வறுமை தின்ற அவள் பொறுமை காட்டு கத்தலாய் வெளிப்பட்டது அவன் நாவல் படித்துக்  கொண்டிருப்பதை பார்த்து. அவன் எப்போதுமே கவனமாக தான் இருப்பான் அம்மாவுக்கு தெரியாமல் நாவல் படிப்பதில். இன்று தான் கோட்டைவிட்டுவிட்டான்.  அடுத்த அரைமணி நேரம் அவன் வாங்காத திட்டு இல்லை...

"சுந்தரம், இந்த பணத்த கொண்டுபோய் கவி அம்மாகிட்ட கொடுத்துட்டு வாடா" என்றால் சுந்தரத்தின் தாய் திட்டி ஓய்ந்த களைப்பில்.

கிராமத்தின் கிழக்கு மூலையில் இருந்தது கவிதாவின் வீடு. சுந்தரத்திற்கு கவிதாவை ரொம்ப பிடிக்கும். இருவருமே சுஜாதாவின் தீவிர ரசிகர்கள். போட்டி போட்டு கொண்டு இருவரும் படிப்பார்கள்,ரசிப்பார்கள்,விவாதிப்பார்கள். அன்று அவள் ஏதோ   துவையல் அரைத்துக்  கொண்டிருந்தால், அம்மிக்கல்லில்.  கையால் தள்ளி அவள் துவையல் அரைக்கும் அழகை ரசித்து கொண்டே அவளை நெருங்கினான் சுந்தரம்.

"கவி வீட்ல அம்மா இல்லையா..." கவிதா அம்மிக்குளவியை சற்று நிறுத்தி இல்லை என்பது போல் தலையசைத்தால்.

"இந்தா  இதுல ஆயிரத்தி ஐநூறு ரூபா இருக்கு, அம்மா வந்தவுடனே கொடுத்திடு"  பையில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான். வாங்கியவள் பணத்தை எண்ணாமல் பக்கத்தில் வைத்தால்.

"சரியா இருக்கானு பார் கவி"

"இது என்ன முத தடவயா.. பரவாயில்லை சுந்தரம்" என்றவள் அவனை பார்த்து புனைகைத்தாள். 

"கவி, உன்ன ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டியே" என்றவனை கேள்வியாக பார்த்தால்.

"என்னை உனக்கு எத்தனை வருசமா தெரியும், என்னைக்காவது உன் மேல கோபப்பட்டிருக்கேனா... " என்று இழுத்தவள் "சும்மா சொல்லு சுந்தரம்" என்று முடித்தால்.

"அது இன்னைக்கு நடந்துற கூடாதுனு தான் யோசிக்கிறேன்" என்றவன் சிந்தனையில் விழுந்தான்... சற்று யோசித்தவன்...

" என் கூட வந்துடு கவி, எங்கயாச்சும் ஓடி போய்டலாம்,அந்த கிழவன் உனக்கு மாப்பிள்ளையா ...வேணாம் கவி..."  சொல்லி முடிக்கவில்லை கவிதாவின் அம்மா பிரசன்னமானால்...

"சுந்தரமா, வாப்பா அம்மா காசு கொடுத்து அனுப்புச்சா" என்றவள் கவிதாவின் அருகில் இருந்த பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தால்.

"சரியா இருக்காம்மா" என்றவன் கவிதாவை பார்த்தான் அவள் எந்த சலனமும் இன்றி தன் வேலையில் ஆழ்ந்துவிட்டால். 

------ நாளை நிறைவடையும்...

Saturday, June 19, 2010

யாருக்கும் மனமும் இல்லை... நேரமும் இல்லை...


ஒரு
மொட்டு
மலர்ந்தது..
என்
மன இடுக்குகளில்
உறைந்திருந்த
துன்ப சுமைகள்...
சிதறி ஓடின...

ஓங்கி
வளர்ந்த மரம்
எப்பொதும்
யாரிடமும்
எதுவும் கேட்டதில்லை...
இலைகளை
உதிர்த்து
இயன்றவரை
சொல்லி பார்க்கும்
ஆனால்
யாருக்கும் புரிவதில்லை
என்ன அவசரமோ...
கூடு இழந்த
குருவிகளின்
கண்ணீர் கதைகளை
அதன்
இலையுதிர் காலத்திலே...

"நீரோடை"
பார்த்ததும்
துள்ளி குதித்தேன்...
எத்தனை
கவிதைகளை
அள்ளி இருப்பேன்...
இங்கிருந்து...
இந்த தடாகத்திலிருந்து...  

எங்கிருந்தோ
வந்த
தென்றல் காற்று
வழி மறித்து...
காதினில்
ஏதோ
உரைத்தது...
அதன் மொழி
புரியவில்லை
தமிழ் இல்லையே...
அதனாலா...  
ஆனால்
மயக்கத்தில் ஆழ்த்தியது...

பூக்கள்,
மரங்கள்,
மலை முகடுகள்,
நீரோடைகள்,
இதமான தென்றல் காற்று,
கணக்கில் வரா
இன்னும்
எத்தனையோ
இயற்கை செல்வம்...
எங்கும் தெறிக்கின்றன...
இன்பமெனும்
நினைவு விதைகளை
பயிரிடத்தான்
இங்கு
யாருக்கும்
மனமும் இல்லை
நேரமும் இல்லை...

Friday, June 18, 2010

நானும் இருக்கேன்... இப்படிக்கு ஜெ...

நான் எதுவும் சொல்றதுக்கு இல்லங்க...இது ஜெயலிதாவோட அறிக்கை... கண்டிப்பா அவங்க எழுதியதா இருக்காது... அவங்க இந்திய நலனுக்காகனு சொல்லிருந்த இந்த பதிவ எழுதிருக்கமாட்டேன்... உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும்...சிங்களவனுக்கு துணை போன நமக்கு... சீன தாங்க சரியான ஆப்பு... பாக்கத்து தேசத்த காப்பாத்த போய்....இருக்குற தேசத்துக்கு நெறி கட்ட ஆரம்பிச்சுருச்சு...சீனகாரன் எல்லாம் பார்கிறதுக்கு ஒரே மாதிரி இருப்பானுங்க...நம்மள எடுத்துக்குங்க...ஒவ்வொரு மாநிலத்துல இருப்பவனும் வ்வொரு மாதிரி... ரொம்ப காலம் கழிச்சு தேசிய ஒருமைபாடுக்கு ஒரு அமைச்சகம்.. எப்படி தேசியத்தை காப்பாத்த போறங்கன்னு பாக்கலாம்... இன்னைக்கு இருக்குற அதிகார மையம்... எனக்கு என்னவோ பிரச்சனையின் ஆழம் தெரியாம...விளையாடுறங்கனு தோணுது...

ஜெயலலிதாவின் நானும் இருக்கேன் அறிகைய பார்த்துட்டு எனக்கு இது தான் தோணுது...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி thastamil.com

இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கி உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.

இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962ம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போது கூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் [^] தொடுத்தது.

குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம். சர்வதேச அரசியல் சதுரங்க விளையாட்டில் தலைசிறந்தவர்களால் இந்தியாவிற்கு இந்த படுதோல்வி அடைந்து அவமானப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நாம் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

அண்மையில் ராஜபக்சே இந்தியாவிற்கு வருகை தந்திருந்தபோது, பயனற்ற, சம்பிரதாயரீதியான பேச்சுகளை அவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.

27 ஆண்டு கால இனப்போர் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப்போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழவிடுதலைப் புலிகள் [^] இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு [^]முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக் கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டுநடவடிக்கை [^] எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும். கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு பதில் அறிக்கை விடுவதை தவிர்த்துவிட்டு அவர் கூறியுள்ள விஷயத்தில் உண்மை இருந்தால், இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, June 17, 2010

இந்த முறை மயங்கமாட்டேன்...

நீண்ட 
இடைவெளி 
இந்த 
சந்திப்பு 
நமக்குத்தான்...

உன்னை 
வெறுக்கிறேன்...
ஏன்
உன்னை 
பார்த்தேன்... 
அந்த
சிரித்த முகம்....அய்யோ
என்னை
காப்பாற்றுங்களேன்...
எங்கே 
போனது 
உன் 
கோபம்...
பரிதாப பார்வை 
பார்த்தாய்...
இந்த
முறை 
மயங்கமாட்டேன்...
உதட்டை
சுழித்து,
முலாம் பூசிய 
சிரிப்புடன்
விடை பெற்றாய்... 
வெகு நேரம் 
பார்த்தேன்...
உன் 
சோர்ந்த நடையினை...
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்...
தூரத்தில் 
போகும் போது 
கண்களை 
துடைத்தாயே
அழுதாயா ... 
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்...

குலுங்கி
அழுகின்றேன்
தேற்ற ஆளில்லை...
நான் 
செய்த 
தவறுக்கு
நீ... 
ஏன்
மன்னிப்பு 
கேட்கின்றாய்...
நான் 
செய்த 
தவறுக்கு
நீ...
ஏன்
துன்ப
சிலுவைதனை 
சுமக்கின்றாய்...
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்...
நீ... 
என்
காதல் சுமை 
தூக்க...

நம் 
பிரிவு 
உனக்கு 
சிறுகாயம்...
என் 
காதல் 
உன்கென்றும்  
பெரும் காயம்...
என்னை மன்னிக்காதே!!!
ஆனால்
கண்டிப்பாய் 
மறந்துவிடு...

Wednesday, June 16, 2010

ராசராசசோழன் மொழிவது...

எல்லாருமே அமைதியா இருந்தாலும் சீமான் இருக்கமாட்டாருனு நினைகிறேன்...

அவரு போசுறதுல எனக்கு எதுவும் தப்பு இருக்குற மாதிரி தெரியல...உளவுத்துறைன்னு ஒன்னு இருக்குங்க...அது செய்ற வேலை கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க... சராசரி மனிதனுக்கு அவ்வளவா புரியாது... உள்நாட்டு பாதுகாப்பு, வல்லரசு ஆகனும் என்கின்ற வெறியில அண்டை நாட்டுல செய்ற அட்டுழியம்...எதுவும் சொல்றதுக்கு இல்ல... என்ன சித்தாந்தம்னா...அடுத்தவனுக்கு தொல்லை கொடுத்தா   அத சமாளிக்கவே அவன் நேரம் சரியா இருக்கும்...நம்ம நிம்மதியா இருக்கலாம் என்கின்ற தப்பு கணக்கு தாங்க...அதாவது பரவால.. அடுத்த நாடு.... தன் நாட்டு மக்களையே போட்டு பாக்குறது தான் தாங்க முடியல...அதுவும்... கருணாநிதி, தமிழ் நாடு காங்கிரஸ் அவங்க தான் தமிழர்னு நெனசுகிட்டு அவங்க செய்ற கூத்து....ரொம்ப கஷ்டம்...


சீமான் என்ன சொல்றார்னு கேளுங்க...  
-------------------------------------------------------------------------------------------------------------
ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான் 


விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்கபிரபாகரன் [^] ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி நாம்தமிழர் இயக்க தலைவர் சீமான் இன்று கூறியதாவது:

தமிழர்கள் எவரும் இது போன்ற காரியத்தை செய்ய மாட்டார்கள். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்ற துண்டு பிரசுரம் கிடந்ததாக போலீஸ் சொல்கிறது.
பிரபாகரனே வன்முறைக்கு எதிரானவர்தான். 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் மீது ஒரு அரசு ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் போரிட்டார் அவரது எதிரிகள் சிங்கள ராணுவமும் ராணுவ தளவாடங்களும்தான். சிங்கள மக்கள் அல்ல. பலாலி விமான தளம் மீதுதாக்குதல் [^] நடத்திய போது பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை தாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழ் பெண்களை சிங்களர்கள் பாலியல் பலாத்காரம் செய்த போதும் கூட, பதிலுக்கு ஒரு சிங்கள பெண்ணின் தாவணியை கூட தொட்டு இழுக்கவில்லை.அப்படிப்பட்டவரின் பெருமையை கொச்சைப்படுத்துவதாக இந்த துண்டு காகிதம் உள்ளது. ஈழ விடுதலைக்கு போராடுபவர்களை தலை குனிய வைக்கவும் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு போல் காட்டி முடக்கி போடவும் நடந்துள்ள சதித் திட்டமாகவே இது படுகிறது. ராஜபக்சேவை திருப்திப்படுத்த அரசுகளின் ஆதரவுடன் நடந்த சதி இது என்கிறேன்.ஈழத்தில் போரை நிறுத்த சொல்லி இங்கு தமிழர்கள் போராட்டம் [^]நடத்தியபோது ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையே. மழையில் நனைந்தும், பட்டினி கிடந்ததும் முத்துக்குமார் போல் எரிந்தும் தன்னைத்தானே வருத்துகிற நிகழ்வுகள்தான் நடந்தன. கடும் மன அழுத்தத்தில் கூட வன்முறையில் ஈடுபடவில்லை. மொழிப் போராட்டத்தில் கூட தங்களை தாங்களே மாய்த்தனர்.தமிழர்கள் முழு ஜனநாயகவாதிகள். பிரபாகரன் தம்பிகள் வன்முறையில் காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல. தேசிய இன விடுதலை மீது பற்று கொண்ட போராளிகள்.தொடர் வண்டி தண்டவாள குண்டு வெடிப்பில் இருப்பு பாதை மரக்கட்டைகள் உருக்குலைந்துள்ளன. ஆனால் பிரபாகரன் தம்பிகள் என்ற துண்டுப் பிரசுரம் மட்டும் எவ்வித சேதமும் இல்லாமல் புத்தம் புதிதாகக் கிடந்தது. அது மட்டுமல்ல... விபத்து குறித்து முதலில் வந்த செய்திகளில் துண்டுப் பிரசுரம் குறித்து தகவலே இல்லை. இதற்கு காரணம் யார் என போலீஸார் தேடி வருகிறார்கள் என்று மட்டும்தான் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் துண்டுப் பிரசுரம் வந்திருக்கிறது. எப்படி என்றுதான் புரியவில்லை!பெரும் காற்று வீசும் வனப்பகுதியில் துண்டு பிரசுரம் பறக்காமல் கிடக்குமா அதன் மேல் கல் வைத்திருந்தால் கூட அழுக்குப் படிந்திருக்கும். அப்படி இல்லாமல் காகிதம் பளிச்சென்று உள்ளது. இதில் மறைந்துள்ள சதி... உள்நோக்கம் நம்மைவிட அரசுகளுக்கே நன்கு தெரியும். அவர்கள்தான் விளக்க வேண்டும்.." என்றார். 
-------------------------------------------------------------------------------------------------------------


உங்களுக்கு எதற்கு...ஈரம்

ஏ! மரக்கட்டைகளே
எவ்வளவு
நேரம்
எரிவீர்கள்...
மனிதர்களிடம் 
இல்லாத ஈரம்
உங்களுக்கு எதற்கு...

மனித வடிவில்
விலங்கு 
ஒன்று 
படுகையிலே
பல நாட்கள்...   
நாடி பிடித்து 
மருத்துவன் சொன்னான்...
"கடவுள் தான் காக்கும்" என்று
அவன் மனிதர்களாய்
மதிக்காத
உறவினர்கள் 
தலையாட்டினர்...
வேறு என்ன 
செய்ய முடியம்...
பெற்றுவிட்டார்களே!!!      

மண் ஆசை
பொன் ஆசை 
பெண் ஆசை 
ஆணாய் இருந்துவிட்டால்...
பெண்களை விட்டுவிட்டார்...
ஆணாதிக்க 
நம் முன்னோர்...

இன்று 
நான் கேட்பதும்...
இன்று 
நான் பார்ப்பதும்...
என் விருப்பம் 
இல்லை
இது மட்டுமே 
இங்கு விற்பனைக்கு...
விருப்போ...வெறுப்போ   
நுகர்வு கலாச்சாரம்
இதில் மட்டும்
மாய்மாலம் 
செய்துவிடும்...
இன்று 
என் மேல் 
திணிக்கப்பட்டவை....
நாளை 
என் 
விருப்பு பட்டியலில்...       
பாவம் தான் 
தோல்வியையே....
பல காலம்
வெற்றியாய்
ருசித்ததனால்...

Tuesday, June 15, 2010

12 C மயிலை பேருந்து...நீ
வருவாய் என
தெரியும்...
நின்றேன்
உன்
பார்வை
படும் படி...

அது
ஒரு மழைக்காலம்
கையில்
கவிதைகள்...
என்னோடு
மழையில்
அவைகளும் நனைந்தன...

12 C மயிலை
பேருந்து...
சன்னலோரம்
நீ...
படிக்கட்டு பயணம்...
ஆதரவு தந்தாய்
என்
கவிதைகளுக்கு ...
உனக்கு
தெரியாது...
அது
அத்தனையும்
உனக்காக
எழுதியவை என்று...

ஒரு நாள்
அத்தனை
கவிதைகளும்
சாலையோரம்...
நீ
மட்டும்
அதே
பேருந்தில்...
உன்னால்
மறுக்கபட்டது....
எனது கவிதைகள் கூட...

Monday, June 14, 2010

திரிகின்றார் அவர் குறளாலே...ஐயா...
பிச்சை போடுங்க சாமி...
என் நண்பன் 
பார்த்தான் 
கீழிருந்து மேலாக..
மறுத்தான்


ஈயென இறத்தல்...
நான்
முடிக்கவில்லை
தமிழ் அறிந்தவன்...
பணம் கிடைத்தது 
அந்த
முதியவருக்கு


சாலையோரத்தில் 
மகிளுந்தை விட்டு
இறங்கினான்...
வாகன நிறுத்துமிட 
சீட்டை 
நீட்டினான்
ஒரு சிறுவன்...
நண்பனின் வாயில்
அனல் தெறிக்கும் 
வார்த்தைகள் 
இனிய உளவாக...
முடிக்கவில்லை
நான் 
அம்பை திட்டுவதில் 
பயனென்ன
கோபத்தை 
விலக்கிக்கொண்டான்  


2010த்திலும்
வள்ளுவர் 
தெரு முழுதும்
திரிகின்றார்... 
அவர் 
குறளாலே...


குரு
என்பார்.. 
இங்கு 
அறத்தை
விற்பார்...
அவர் நாண
வள்ளுவம் 
வழி நிற்போம்...
மனிதனாய்...
உயர்ந்த 
மனிதனாய்...

Sunday, June 13, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 8


காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4
காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 5

எங்களை புன்சிரிப்போடு வரவேற்றாள் மீனா... அவள் வீடு சற்று விசாலமானதாய் இருந்தது  அவள் மனதை போலவே... அக்காள் தங்கை இருவரும் பழரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்...அதுவரை என் காதலி வரவில்லை.

நிமிடங்களை பேச்சுக்கள் அழித்துகொண்டிருந்தன... மலை முகடுகளில் இருந்து வெளிவரும் சூரிய வெளிச்சம் போல் கதவினை திறந்து அவள் வெளிவந்தால்...எங்கும் அமைதி...பார்வைக்குள் பல வார்த்தை பரிவர்த்தனைகள்...அவள் வேண்டும் என்றே முகத்தை கவலையாக வைத்திருந்தது போல் இருந்தது.  யாரிடமும் சரியாக பேசவில்லை... அவளை சங்கடபடுத்த நான் விரும்பவில்லை அவளை நொடிக்கொருதரம் கண்களில் அணுகினாலும்...அவள் விலகினால்... மீனாவிடமும் அவள் தங்கையிடமும் நன்றி சொல்லி கிளம்பும்போது அவர்கள் இருவரும் எனக்காக வருத்தப்பட்டார்கள் 

ஒரு சில நாட்கள் தான்...சிறிது சிறிதாக அவள் கணிபொறி மையத்திற்கு வருவது குறைந்தது...என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது..

ஒரு மிக பெரிய மன போராட்டம்...அவளை பற்றிய நினைவினால்... கொஞ்ச காலம் படிப்பில் கவனம் இல்லாமல் கழிந்தது...

மெய்யாக வந்தவள்
பொய்யாக போனால்...

ஒரு 
பாதி பூவாக
மறு பாதி
முள்ளாக 
என் 
நினைவலைகளில் 
வசிக்கின்றால்...

நெருங்கிய
சொந்தமெல்லாம்
என்
கவலை 
அறியுமுன்னே...
கால வெள்ளத்தில் 
கரைந்தேவிட்டால்...
கரையினில் 
நின்று கொண்டு 
நான் 
மனம் கலங்கி 
தவிக்கின்றேன்...

குடும்ப சூழ்நிலை அவளின் நினைப்பை சற்று குறைத்தது...மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

ஒரு வருடம் கலைந்தது...கரைந்தது... 

எங்கள் கணிபொறி மையத்தின் அருகில் ஒரு தேநீர் கடை இருந்தது, அது தான் அனைத்து நண்பர்களும் கூடும் இடம்... நாங்கள் செல்லமாக அதற்கு வைத்த பெயர் "யு.ஸ்" முக்கால்வாசி கணிபொறி பயில்வரின் லட்சியமே அமெரிக்க போவதுதான் அப்போது, அதனால் அதற்கு முன்னோட்டமாக இந்த பெயர் வைத்தோம். 

நண்பர்களுடன் ஒரு நாள் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா மருத்துவமனை பக்கமாக ஒரு உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது...உருவம் நன்கு தெரியும் பொழுது...உடம்பு நடுங்கியதே பாருங்கள்...அப்படி ஒரு நடுக்கம்...ரத்த ஓட்டம் அதிகமாகி இதயம் படபடத்தது....

அவள் தான்...ஒரு வருடம் கழிந்தும் மனதில் அழியாத அவள் உருவம்... அதே அழகு முகம்...சிரித்த முகம்...

என்னை கண்டும் காணமல் போய்விடுவாள் என்று நினைத்தேன்...அப்படி நடக்கவில்லை...

தொடரும்...

Related Posts with Thumbnails