அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Tuesday, June 15, 2010

12 C மயிலை பேருந்து...நீ
வருவாய் என
தெரியும்...
நின்றேன்
உன்
பார்வை
படும் படி...

அது
ஒரு மழைக்காலம்
கையில்
கவிதைகள்...
என்னோடு
மழையில்
அவைகளும் நனைந்தன...

12 C மயிலை
பேருந்து...
சன்னலோரம்
நீ...
படிக்கட்டு பயணம்...
ஆதரவு தந்தாய்
என்
கவிதைகளுக்கு ...
உனக்கு
தெரியாது...
அது
அத்தனையும்
உனக்காக
எழுதியவை என்று...

ஒரு நாள்
அத்தனை
கவிதைகளும்
சாலையோரம்...
நீ
மட்டும்
அதே
பேருந்தில்...
உன்னால்
மறுக்கபட்டது....
எனது கவிதைகள் கூட...

3 comments:

சி. கருணாகரசு said...

அடடா வட போச்சா?

சி. கருணாகரசு said...

காதல் சில கவிஞர்களையும்.... பல கவிதைகளையும்....
கொஞ்சம் பைத்தியங்களையும் உற்பத்தி செய்யுக்கொண்டேதான் இருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் ராசராசசோழன்

கவிதை அருமை - கற்பனை அருமை

மறுக்கப்பட்டது கவிதைகள் கூட ..... மறைந்திருக்கும் பொருள் ஆயிரம்

நல்ல கற்ப்னையில் விளைந்த நற்கவிதை
நல்வாழ்த்துகள் ரா ரா சோ
நட்புடன் சீனா

Post a Comment

Related Posts with Thumbnails