அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 21, 2010

ராசராசசோழனின் 50வது பதிவு...


அன்பு பதிவுலக நண்பர்களே!

என்னை பதிவுலகத்திற்கு இழுத்து வந்த வினவு வலைத்தளத்திற்க்கு என் முதல் நன்றி...எனக்கு தமிழ் வலைப்பக்கங்களில் அலாதி பிரியம் தினமும் ஒரு முறையாவது பார்க்கும் வலைத்தளம் தட்ஸ்தமிழ், வினவு, யாழ்... ஒரு முறை வினவு தளத்தில் வந்த அங்காடித்  தெரு படத்தின் விமர்சனம் படித்தேன்...அங்கிருந்த தொடர்பு இடுகையின் மூலம் "தீராத பக்கங்கள்" தளத்தின் அங்காடி தெரு விமர்சனம் படிக்கும் போது அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்கின்ற வெறியே வந்துவிட்டது.  அன்றிலிருந்து மாதவராஜின் எழுத்துக்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்...அவரது பக்கங்களில் இருந்து தான்...காமராஜ்,செ.சரவணகுமார்,ராகவன்,ஈரோடு கதிர்...என அந்த பட்டியல் நீளுகிறது...இது நான் பதிவுலக வாசகன் ஆன கதை.

செ.சரவணகுமார் அவர்களின் "மீண்டும் சவுதி அரேபியா" பதிவை படிக்கும் போது இனம் தெரியாத சோகம்...அதோடு ஒரு உந்துதல் எழுத ஆரம்பித்தேன். இன்று ஐம்பதாவது பதிவை எழுதிக்கொண்டிருகிறேன். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் எந்த பதிவை பார்த்து நான் எழுத ஆரம்பித்தேனோ அவர் தான் என் மூன்றாம் பதிவிற்கு முதலில் கருத்துரைத்தார் (சந்தேகம் இருப்பவர்களுக்கு - http://tamil-for-tamilpeople.blogspot.com/2010/04/1_15.html#comments).  
   

என் முதல் கதை "காதல் மட்டுமே....இளவயது இலவசம்..." அவரின் முதல் கருத்து இதுதான் 
--------------------------------------------மிக அருமையான எழுத்து, நல்ல நடை. இன்னும் நிறைய எழுதுங்கள் சகோதரரே.

-------------------------------------------

அன்று அவர் கொடுத்த ஊக்கமே... என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கிறது... அவருக்கு எனது முதல் நன்றி... இரண்டாவது நன்றி... காமராஜ் ஐயாவிற்கு...  

என்னுடைய மூன்றாவது நன்றி... என் வலைதளத்தை வாசித்து பார்த்து என்னை புதிய பதிவரின் முதல் பகுதியில் அறிமுகம் செய்துவைத்த அருமை நெஞ்சம்  மாதவராஜ் அவர்களுக்கு... 

அவர் கொடுத்த சான்றிதல்...

--------------------------------------------------------------
5. ராசராசசோழன்:
இவரது வலைப்பக்கம் அ..ஆ... புரிந்துவிட்டது... கற்றது கைமண் அளவு . இவரும் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். ’சராசரி மனிதன்.... கொஞ்சம் தமிழ் இன உணர்வுடன்’ என தன்னை அடையாளப்படுத்தும் இவர் நிறைய எழுதுகிறார். எழுத்தும் நடையும் இயல்பாய் இருக்கிறது. இன்னும் கூர்மை பெற வேண்டும்.
 --------------------------------------------------------------

   
என்னுடைய பதிவிற்கு வளமையான கருத்துரைகள்  வழங்கி கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி... பட்டியல் மிக நீளமானது எழுத்துகளில் அச்சிடமுடியவில்லை.... தென் தமிழகத்தின் கல்யாண பத்திரிகை போல்...(வேணும் என்கிறீர்களா).


சுந்தரம்....பகுதி- 2 (சிறுகதை) 


"சரியா இருக்குப்பா, உள்ள வா கொஞ்சம் டீ குடிச்சிட்டு போலாம்"    என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்ல யத்தனித்தாள். ராக்கம்மா நல்லவள் தான் ஆனால் முன்கோபி சண்டை என்று வந்துவிட்டால் யார் என்று பார்க்கமாட்டால் அவ்வளவு தான் கிழி கிழி என்று கிழித்துவிடுவாள் அதனால்  முடிந்தவரை அவளை யாரும் நெருங்க மாட்டார்கள்.     

"இல்லம்மா, இன்னொரு நாள் வரேன்"  கவலையை  பெருமூச்சாய் வெளியேற்றி அங்கிருந்து தப்பித்தான்.

கவிதாவை அந்த ஊர் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். அவள் அம்மாவை போல  அதிர்ந்து பேச மாட்டாள். அவள்  மேல் அந்த ஊர் காட்டும் அன்புக்கு  ,அவள் தந்தையை இழந்தவள் என்பதும் ஒரு காரணம். சுந்தரத்திற்கு அவள் மேல் காதல் இல்லை ஆனால் இதயத்தின் ஒரு ஓரத்தில் அவள் நினைவுகளை சேமித்துக்கொண்டிருகிறேன். அவளை ஒரு வயதானவருக்கு திருமணம் செய்ய அவள் அம்மா எடுத்த முடிவு... நடந்த நிச்சயம் அனைத்தும் அவனை தடுமாறவைத்தது. அளவுக்கு அதிகமாய் அவளை பற்றிய நினைவுகளால் நிம்மதியிழந்தான்.

"ஏய் சுந்தரம் நில்லுடா" அவன் நண்பன் ரவி 

சுந்தரம் நிற்பதாக தெரியவில்லை சற்று ஓங்கி அழைத்தான். ஒரு வழியாய் அவன் நினைவுகள்  நிகழ்காலத்திற்கு தரையிறங்கியது. ரவியை பார்த்து தலையசைத்தான் அதற்குள் ரவி அவனை நெருங்கிவிட்டான்.

"டேய், என் நண்பன் சென்னைல இருந்து வந்திருக்கான்டா...அவனோட சொந்தக்காரர்  அலுவலகத்தில ஆளு வேணுமா உன் ஞாபகம் வந்துச்சு உன்னை பத்தி சொன்னேன்...உடனே வர சொல்லி இருக்காங்க, இந்தா  அவங்க விலாசம், தொலைபேசி எண்ணும் இருக்கு, போறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட பேசிடு " என்றவன் ஒரு சிறு காகிதத்துண்டை அவனிடம் நீட்டினான். சுந்தரம் உணர்ந்து நன்றி தெரிவிக்கும் முன்னே நடையை கட்டிவிட்டான். 

சென்னையின் வெயில் சுந்தரத்தை பாடாய்படுத்தியது ஆனால் அலுவலகம் முழுதும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டு இருந்ததால் சமாதானப்படுதிக்கொண்டான். அவன் கிராமம் தமிழகத்தின் தென்கோடியில் இருந்தாலும் இந்த அளவு வெயில் அவன் அனுபவித்தது கிடையாது. அலுவலகத்தில் அறிமுக படலம் முடிந்து தனக்குரிய ஆசனத்தில் வந்து உட்கார்ந்தான். தன் தந்தை இறந்த பிறகு அம்மா பட்ட கஷ்ட நஷ்டங்கள் அவன் கண் முன் வந்து போனது கூடவே கவிதாவின் நினைவுகளும் கவலையை அப்பிப்போனது. ஒரு வாரம் அப்படி இப்படி என்று கழிந்தது. முதல் வாரம் என்பதால் வேலையும்  அதிகம் இல்லை.

"அம்மா, நல்லா இருக்கியா" புதிதாய் வாங்கிய கைபேசியில் இருந்து முதல் தொடர்பு.

"நல்ல இருக்கேன் சுந்தரம்,  நீ எப்படிப்பா இருக்க" குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"நல்ல இருக்கேன்மா, ஏன்மா  என்னமோ போல பேசுற உடம்பு சரியில்லையா" வார்த்தையில் பரிதாபம் கூடி இருந்தது. "இனி எதுக்கும் கவலைப்படாதேமா, நான் இருக்கேன்" சொல்லி முடிக்கவில்லை அவன் அம்மா உள்ளம் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டால். இவன் எவ்வளவோ முயன்றும் அவள் நிறுத்துவதாய் தெரியவில்லை.

"ஏன்மா என்ன ஆச்சு, சொல்லிட்டு அழு" சற்று சத்தமாய் சொல்லவே உடைந்த குரலில் பேச ஆரம்பித்தால்.

"ராக்கம்மா நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டா சுந்தரம், நேத்துல இருந்து கவிய காணல,  ஊரே அமளிய இருக்கு. அந்த பொண்ணு உன் கிட்ட தான் அதிகமா பேசுனு ஊரே உன்னை சந்தேகப்படுதுப்பா"

விசயத்தின் சூடு காது வழியே இதயத்தில் பரவியது, 

------நண்பர்களே பொறுத்தருளவும் நாளை நிச்சயம் நிறைவடையும்....

10 comments:

ஜெகதீஸ்வரன். said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்>!

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

Ananthi said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.. :)

LK said...

congrats

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள்.......

Chitra said...

Congratulations! Thats good! :-)

கே.ஆர்.பி.செந்தில் said...

50௦வது பதிவு... வாழ்த்துக்கள்..

நியோ said...

வாழ்த்துக்கள் தோழர் ... மிகுந்த மகிழ்ச்சி ...

skaamaraj said...

ஐம்பதாவது பதிவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.இன்னும் வேகமாகவும்,தடித்த கருத்துக்களாலும் நிறைய்ய எட்டிப்பிடிக்கவேண்டும். எழுத எழுத அழகு.
வாழ்த்துக்கள் ராசராசசோழன்.

Kousalya said...

நண்பருக்கு அன்பான வாழ்த்துகள்

க.பாலாசி said...

மகிழ்ச்சியாக இருக்கிறது... வாழ்த்துக்கள் அன்பரே...

Post a Comment

Related Posts with Thumbnails