அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 7, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 7


இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன...வெறுமையாய் இந்த சிறு விசயத்திற்கு ஏன் இவள் இப்படி இருக்கின்றால் என்று மனதினில் போராட்டம்....


அவளுக்கும் எனக்குமாக ஒரு தோழி இருந்தால் அவள் உடைத்தால் என் காதல் கனவை... அரசால் புரசலாக எல்லோருக்கும் தெரிந்த எனது காதல் எப்படியோ என் காதலியின் காதிற்கும் எட்டியுள்ளது. எத்தனையோ முரளி படம் பார்த்திருப்பீர்கள் என் நிலையும் அப்படி தான் இருந்தது அவளின் செய்கை எனக்கு சுத்தமாக புரியவில்லை.... பிடிக்கவில்லையா... பிடித்திருக்கிறாதா... ஒன்றும் புரியவில்லை கேட்கவும் தைரியம் இல்லை... முன் பனி கால மரம் போல என் மனம் மகிழ்ச்சியை உதிர்த்து கொண்டிருந்தது. எங்கும் வெறுமை சூழ்ந்து கால நிலையை கலங்கடித்தது இரவும் தெரியவில்லை... பகலும் தெரியவில்லை...  மிக கொடுமையான நாட்கள்...


ஆர்பரித்த சிந்தனையில் கொடுமையான ஒரு பேருந்து பயணம் முடித்து வகுப்பு அறையில் நுழைந்தேன்...எல்லோரும் முகத்தில் புன்னகை தவழ பேசிக்கொண்டிருந்தனர்... நான் நுழைந்ததும் ஒரு சிறு அமைதி பின்பு திரும்பவும் பேச்சு தொடர்ந்தது சற்று நேரத்தில் அவள் நுழைந்தால் வகுப்பறையினில் திரும்பவும் ஒரு அமைதி... ஒரு சில நாட்களாகவே இப்படித்தான் நடக்கிறது... என் காதலுக்கு அவர்கள் செலுத்தும் மவுன அஞ்சலியாக அந்த ஒரு சில நொடி அமைதி எனக்குப்பட்டது.

"மச்சி இன்னைகாவது அவ கிட்ட பேசுடா" இந்த வார்த்தை, என் நண்பன் தினமும்   உச்சரிக்கும் மந்திரம் ஆனது.

எங்கள் வகுப்பில் மீனா என்று ஒரு பெண் எங்களை விட சற்று வயதானவள் அதிகம் இல்லை ஒன்று அல்லது இரண்டு வருடம் மூப்பு எனக்கு அறிவுரை வழங்கினால் அதுமட்டும் இல்லை என்னை பற்றியும் என் காதலியிடம் பேசி இருக்கிறாள்.

"அவ அவளுடைய மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுற வீணா காதல் அது இதுன்னு காலத்தை கழிச்சிடாதே அவ்வளவு தான் நான் சொல்லுவேன் " மீனாவின் வார்த்தைகள் என்னை கலங்கவைத்து

இன்று மீனாவின் பிறந்தநாள் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தால் வகுப்பு முடிந்து எல்லோரும் ஒன்றாக அவள் வீட்டுக்கு சென்றோம் என்னவள் மட்டும் அந்த கூட்டத்தில் இல்லை. என் முகம் தேக்கிவைத்திருந்த கவலையை பார்த்து என் நண்பன் உறுதி படுத்தி கொண்டான் என் காதலியின் வருகையை...

இன்று எப்படியும் பேசிவிடுவது என்ற முடிவில் இருந்தேன்...

தொடரும்...

2 comments:

செ.சரவணக்குமார் said...

நல்ல நடையில் அருமையாக எழுதுகிறீர்கள்.

ஒவ்வொரு பகுதியையும் இன்னும் சற்று விரிவாக எழுதலாமே நண்பரே..

தொடருங்கள்.

ராசராசசோழன் said...

நன்றி செ.சரவணக்குமார்... நிச்சயம் செய்கிறேன்...

Post a Comment

Related Posts with Thumbnails