அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Sunday, June 13, 2010

காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 8


காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 4
காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 5

எங்களை புன்சிரிப்போடு வரவேற்றாள் மீனா... அவள் வீடு சற்று விசாலமானதாய் இருந்தது  அவள் மனதை போலவே... அக்காள் தங்கை இருவரும் பழரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்...அதுவரை என் காதலி வரவில்லை.

நிமிடங்களை பேச்சுக்கள் அழித்துகொண்டிருந்தன... மலை முகடுகளில் இருந்து வெளிவரும் சூரிய வெளிச்சம் போல் கதவினை திறந்து அவள் வெளிவந்தால்...எங்கும் அமைதி...பார்வைக்குள் பல வார்த்தை பரிவர்த்தனைகள்...அவள் வேண்டும் என்றே முகத்தை கவலையாக வைத்திருந்தது போல் இருந்தது.  யாரிடமும் சரியாக பேசவில்லை... அவளை சங்கடபடுத்த நான் விரும்பவில்லை அவளை நொடிக்கொருதரம் கண்களில் அணுகினாலும்...அவள் விலகினால்... மீனாவிடமும் அவள் தங்கையிடமும் நன்றி சொல்லி கிளம்பும்போது அவர்கள் இருவரும் எனக்காக வருத்தப்பட்டார்கள் 

ஒரு சில நாட்கள் தான்...சிறிது சிறிதாக அவள் கணிபொறி மையத்திற்கு வருவது குறைந்தது...என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது..

ஒரு மிக பெரிய மன போராட்டம்...அவளை பற்றிய நினைவினால்... கொஞ்ச காலம் படிப்பில் கவனம் இல்லாமல் கழிந்தது...

மெய்யாக வந்தவள்
பொய்யாக போனால்...

ஒரு 
பாதி பூவாக
மறு பாதி
முள்ளாக 
என் 
நினைவலைகளில் 
வசிக்கின்றால்...

நெருங்கிய
சொந்தமெல்லாம்
என்
கவலை 
அறியுமுன்னே...
கால வெள்ளத்தில் 
கரைந்தேவிட்டால்...
கரையினில் 
நின்று கொண்டு 
நான் 
மனம் கலங்கி 
தவிக்கின்றேன்...

குடும்ப சூழ்நிலை அவளின் நினைப்பை சற்று குறைத்தது...மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

ஒரு வருடம் கலைந்தது...கரைந்தது... 

எங்கள் கணிபொறி மையத்தின் அருகில் ஒரு தேநீர் கடை இருந்தது, அது தான் அனைத்து நண்பர்களும் கூடும் இடம்... நாங்கள் செல்லமாக அதற்கு வைத்த பெயர் "யு.ஸ்" முக்கால்வாசி கணிபொறி பயில்வரின் லட்சியமே அமெரிக்க போவதுதான் அப்போது, அதனால் அதற்கு முன்னோட்டமாக இந்த பெயர் வைத்தோம். 

நண்பர்களுடன் ஒரு நாள் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா மருத்துவமனை பக்கமாக ஒரு உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது...உருவம் நன்கு தெரியும் பொழுது...உடம்பு நடுங்கியதே பாருங்கள்...அப்படி ஒரு நடுக்கம்...ரத்த ஓட்டம் அதிகமாகி இதயம் படபடத்தது....

அவள் தான்...ஒரு வருடம் கழிந்தும் மனதில் அழியாத அவள் உருவம்... அதே அழகு முகம்...சிரித்த முகம்...

என்னை கண்டும் காணமல் போய்விடுவாள் என்று நினைத்தேன்...அப்படி நடக்கவில்லை...

தொடரும்...

3 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒரு சின்னப் பையன் சின்னப் பொண்ண காதலிச்சா
பாடு வரும் காதல் பாட்டு வரும்

சந்ரு said...

தொடருங்கள்....

ராசராசசோழன் said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்,சந்ரு...

Post a Comment

Related Posts with Thumbnails