அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Thursday, June 10, 2010

நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை...நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை...

ஒரு
உணர்வற்ற தலைவன்
குடும்பத்தோடு
ஆட்சி கட்டிலில்
கும்மாளம் அடிப்பதை
காண்பதற்கு....

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை...

தன்
இனம்
அழித்தவனை
ஆரத்தழுவும்
அருவருப்பை
காண்பதற்கு....

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை...

அரசியல்
என்றால் 
கண்ணில்
ஆட்சி மட்டும்
பளபளக்கும்
தமிழ்
அரசியல்வாதி குமுட்டைகளை
காண்பதற்கு....

நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை...

ஐயோ
என் தமிழ் நாட்டில்
நான் இல்லை...
முத்துக்குமார் போன்று
சிறு பொறியாய்...

என்
இனமே
துரோகி கூட்டங்களால்
தூள் தூளாகி போனயே!

மரணத்தை
வென்ற மாவீரர்கள்
புகைபடங்களில்
துரோக கூட்டங்கள்
மனதை
அம்மணமாக்கி
அம்பலத்தில்....


6 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

வருத்தம், கோபம், இயலாமை ..
நமக்கு கவிதைதான் சொல்ல முடியும் ..
பாராட்டுக்கள்

kashyapan said...

the posting of anonymous is in bad taste.racial discrimination is switched off and on by the rulers.The best example is balkanisation of central europe.K.R.Narayanan was the president of India while his beloved wife is a Burmese women.Humanism must be the basic creed.U cd reject such postings...kashyapan.

ராசராசசோழன் said...

கே.ஆர்.பி.செந்தில்... நீங்கள் சொல்வது உண்மை தான்... இயலாமையின் வெளிப்பாடே இந்த கவிதை...

ராசராசசோழன் said...

kashyapan...உங்களை போன்ற பெரியவர்கள் என் பதிவை படித்து எனக்கு பெருமை... நீங்க சொல்வது உண்மைதான்... உணர்கிறேன்... கவிதை திருத்தபட்டது..ஒரு கருத்தும் நீக்க பட்டு உள்ளது..

நியோ said...

அன்பு சோழன் ...
அடியேனும் உங்கள் உணர்வுகளோடு இணைந்து கொள்கிறேன் ....
வருகிறேன் தோழர் !

Ajith Bsc MBA said...

I too feel the agony just like you. I hope this moron CM's days are numbered

Post a Comment

Related Posts with Thumbnails