அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Friday, June 11, 2010

இளையமித்ராவின் அழகிய முகம்...

மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான் இடை இடையே இளவரசி இளையமித்ராவின் அழகிய முகம் குறுகிட்டது அவன் முக தசைகளின் அசைவுகளில் இது எளிதாய் துலங்கிற்று. பூப்பாறை அருவியில் அவளோடு புனலாடியது அதை ஒட்டிய ஆல மர நிழலில் ஒட்டி உறவாடியது அவன் மனதை என்னவோ செய்தது இந்த சிந்தனைகள்.   

"செல்வா... இன்னைகாவது சீக்கிரம் எழுந்திரிடா " தமிழ்செல்வனின் அம்மா

அம்மாவின் தொந்தரவு தாங்கமால் தூக்கத்தை தூர வீசியவாரே எழுந்தான்... சரியாக அந்த நேரம் பார்த்து கைபேசியில் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடல் ரிங்டோனாக...

"செல்வா... நான் ஊருக்கு போறேன் அங்க போயிட்டு உனக்கு போன் பண்றேன்" தொடர்பு உடனே துண்டித்தது. செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை நேற்று இரவு வரை இன்று ஊருக்கு போவதை பற்றி இன்பா சொல்லவில்லையே... மீண்டும் போன் செய்து கேட்போமா என அவன் சிந்தனைகள் ஓடி கொண்டிருக்கையில்...காபியை நீட்டினாள் அவன் அம்மா வாங்கி வேகமாக குடித்தவன் அதை விட வேகமாய் மற்ற காரியங்களை முடித்து அவன் பல்சரில் வெளியே கிளம்பினான்...

இன்பாவின் இல்லம் ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு பெரிய பங்களா... தூர இருந்து நோட்டம்விட்டான் செல்வா...

கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தை நோக்கி இறங்கியது ஒரு நீண்ட வாள் தமிழ்செல்வன் லாவகமாக அதை தடுத்து சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை உணர்ந்தவனாக கடுமையாக போரிட்டான்...ஐந்து வீரர்கள் சூழ்ந்து கொள்ள  தன் புரவியை இடப்பக்கம் இருந்த மலை சரிவில் இறக்கி இலகுவாக தன் வாளை வீச வழி செய்துகொண்டேன்... அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை எதிரிகளால்... ஒருவன் மட்டும் வெகு தூரம் துரத்தி வந்தான் அவனையும் நெட்டி தள்ளினான் சிற்றாரின் பள்ளத்தில்... சற்று தூரம் புரவியை வேகமாய் விரட்டியவன்... இளையமித்ராவை கண்டதும் நிறுத்தி இறங்கினான்...


 "செல்வா... இன்னைகாவது சீக்கிரம் எழுந்திரிட" தமிழ்செல்வனின் அம்மா, கண்களை கசக்கியவாரே எழுந்தவன் கைபேசியில் மணி பார்த்தான் மணி ஏழு, ஒரு SMS அவன் INBOXல் வசித்து கொண்டிருந்தது... அதை காலி செய்ய திறந்தான் குறுஞ்செய்தியை "செல்வா... அது என் அண்ணனின் நண்பர்கள்...மன்னிக்கவும்...I love u Inbaa" சிரித்துகொண்டே உதடோரம் இருந்த காயத்தை தடவிவிட்டான். அருகில் இருந்த மேசையில் சாண்டில்யனின் கடல்புறா புத்தகம் பாதி படிக்கப்பட்டு மீதி மேசையை நிறைத்து கொண்டிருந்தது. 

3 comments:

சந்ரு said...

அசத்துங்க....

நேசமித்ரன் said...

பாராட்டுக்கள்

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails