அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 14, 2010

திரிகின்றார் அவர் குறளாலே...ஐயா...
பிச்சை போடுங்க சாமி...
என் நண்பன் 
பார்த்தான் 
கீழிருந்து மேலாக..
மறுத்தான்


ஈயென இறத்தல்...
நான்
முடிக்கவில்லை
தமிழ் அறிந்தவன்...
பணம் கிடைத்தது 
அந்த
முதியவருக்கு


சாலையோரத்தில் 
மகிளுந்தை விட்டு
இறங்கினான்...
வாகன நிறுத்துமிட 
சீட்டை 
நீட்டினான்
ஒரு சிறுவன்...
நண்பனின் வாயில்
அனல் தெறிக்கும் 
வார்த்தைகள் 
இனிய உளவாக...
முடிக்கவில்லை
நான் 
அம்பை திட்டுவதில் 
பயனென்ன
கோபத்தை 
விலக்கிக்கொண்டான்  


2010த்திலும்
வள்ளுவர் 
தெரு முழுதும்
திரிகின்றார்... 
அவர் 
குறளாலே...


குரு
என்பார்.. 
இங்கு 
அறத்தை
விற்பார்...
அவர் நாண
வள்ளுவம் 
வழி நிற்போம்...
மனிதனாய்...
உயர்ந்த 
மனிதனாய்...

4 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழும் வள்ளுவர் சொல்லிருக்காரு ..
நான் என்றால் உதடுகள் ஒட்டாது ..
நாம் என்றால் ஓட்டும் ..

என்ன புலமை ..

மற்றபடி கவிதை அருமை ..

r.v.saravanan said...

கவிதை அருமை

நியோ said...

" அவர் நாண
வள்ளுவம்
வழி நிற்போம்... "

நல்ல தொரு அழைப்பு தோழர் ...
நானும் உறுதி கொள்கிறேன் !

ராசராசசோழன் said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்,r.v.saravanan,நியோ

Post a Comment

Related Posts with Thumbnails