அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Wednesday, June 16, 2010

உங்களுக்கு எதற்கு...ஈரம்

ஏ! மரக்கட்டைகளே
எவ்வளவு
நேரம்
எரிவீர்கள்...
மனிதர்களிடம் 
இல்லாத ஈரம்
உங்களுக்கு எதற்கு...

மனித வடிவில்
விலங்கு 
ஒன்று 
படுகையிலே
பல நாட்கள்...   
நாடி பிடித்து 
மருத்துவன் சொன்னான்...
"கடவுள் தான் காக்கும்" என்று
அவன் மனிதர்களாய்
மதிக்காத
உறவினர்கள் 
தலையாட்டினர்...
வேறு என்ன 
செய்ய முடியம்...
பெற்றுவிட்டார்களே!!!      

மண் ஆசை
பொன் ஆசை 
பெண் ஆசை 
ஆணாய் இருந்துவிட்டால்...
பெண்களை விட்டுவிட்டார்...
ஆணாதிக்க 
நம் முன்னோர்...

இன்று 
நான் கேட்பதும்...
இன்று 
நான் பார்ப்பதும்...
என் விருப்பம் 
இல்லை
இது மட்டுமே 
இங்கு விற்பனைக்கு...
விருப்போ...வெறுப்போ   
நுகர்வு கலாச்சாரம்
இதில் மட்டும்
மாய்மாலம் 
செய்துவிடும்...
இன்று 
என் மேல் 
திணிக்கப்பட்டவை....
நாளை 
என் 
விருப்பு பட்டியலில்...       
பாவம் தான் 
தோல்வியையே....
பல காலம்
வெற்றியாய்
ருசித்ததனால்...

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ராசராசசோழன்

அருமை அருமை - சிந்தனை நன்று - எரியத் தடையான ஈரம் உள்ள மரங்களை, ஏன் ஈரம் எனக் கேட்பது நன்று.

பெற்றோர்களை மதிக்காத விலங்கு ஒன்று இறுதி நாட்களீல் படும் பாடு ..... அவனருகில் அதே பெற்றோர் .... ம்ம்ம்ம்ம்ம் கருத்து நன்று

தோல்வியைப் பல காலம் வெற்றியாக ருசித்ததன் பலன் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது

சிந்தனை நன்று - கற்ப்னை நன்று - கவிதை நன்று

நல்வாழ்த்துகள் ரா.ரா.சோழன்
நட்புடன் சீனா

Chitra said...

மண் ஆசை
பொன் ஆசை
பெண் ஆசை
ஆணாய் இருந்துவிட்டால்...
பெண்களை விட்டுவிட்டார்...
ஆணாதிக்க
நம் முன்னோர்............. :-)


..... உங்கள் கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..... பாராட்டுக்கள்!

Post a Comment

Related Posts with Thumbnails