அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 21, 2010

சுந்தரம்...சுந்தரத்தின் கையில் ஒரு நாவல்... வெகு நேரம் கீழே வைக்காமல் படித்துக்கொண்டிருந்தன்...கதை மாந்தர் அவன் மன உணர்ச்சிகளை மாறி மாறி ஆக்கிரமித்து கொண்டிருந்தனர்.  தொலைவில் அவன் அம்மா நூல் புடவையில் ஒட்டு தையல் போட்டு வறுமைக்கு விளம்பரம் செய்து கொண்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தால் காலம் தின்ற அவள் இளமை, வறுமை தின்ற அவள் பொறுமை காட்டு கத்தலாய் வெளிப்பட்டது அவன் நாவல் படித்துக்  கொண்டிருப்பதை பார்த்து. அவன் எப்போதுமே கவனமாக தான் இருப்பான் அம்மாவுக்கு தெரியாமல் நாவல் படிப்பதில். இன்று தான் கோட்டைவிட்டுவிட்டான்.  அடுத்த அரைமணி நேரம் அவன் வாங்காத திட்டு இல்லை...

"சுந்தரம், இந்த பணத்த கொண்டுபோய் கவி அம்மாகிட்ட கொடுத்துட்டு வாடா" என்றால் சுந்தரத்தின் தாய் திட்டி ஓய்ந்த களைப்பில்.

கிராமத்தின் கிழக்கு மூலையில் இருந்தது கவிதாவின் வீடு. சுந்தரத்திற்கு கவிதாவை ரொம்ப பிடிக்கும். இருவருமே சுஜாதாவின் தீவிர ரசிகர்கள். போட்டி போட்டு கொண்டு இருவரும் படிப்பார்கள்,ரசிப்பார்கள்,விவாதிப்பார்கள். அன்று அவள் ஏதோ   துவையல் அரைத்துக்  கொண்டிருந்தால், அம்மிக்கல்லில்.  கையால் தள்ளி அவள் துவையல் அரைக்கும் அழகை ரசித்து கொண்டே அவளை நெருங்கினான் சுந்தரம்.

"கவி வீட்ல அம்மா இல்லையா..." கவிதா அம்மிக்குளவியை சற்று நிறுத்தி இல்லை என்பது போல் தலையசைத்தால்.

"இந்தா  இதுல ஆயிரத்தி ஐநூறு ரூபா இருக்கு, அம்மா வந்தவுடனே கொடுத்திடு"  பையில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான். வாங்கியவள் பணத்தை எண்ணாமல் பக்கத்தில் வைத்தால்.

"சரியா இருக்கானு பார் கவி"

"இது என்ன முத தடவயா.. பரவாயில்லை சுந்தரம்" என்றவள் அவனை பார்த்து புனைகைத்தாள். 

"கவி, உன்ன ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டியே" என்றவனை கேள்வியாக பார்த்தால்.

"என்னை உனக்கு எத்தனை வருசமா தெரியும், என்னைக்காவது உன் மேல கோபப்பட்டிருக்கேனா... " என்று இழுத்தவள் "சும்மா சொல்லு சுந்தரம்" என்று முடித்தால்.

"அது இன்னைக்கு நடந்துற கூடாதுனு தான் யோசிக்கிறேன்" என்றவன் சிந்தனையில் விழுந்தான்... சற்று யோசித்தவன்...

" என் கூட வந்துடு கவி, எங்கயாச்சும் ஓடி போய்டலாம்,அந்த கிழவன் உனக்கு மாப்பிள்ளையா ...வேணாம் கவி..."  சொல்லி முடிக்கவில்லை கவிதாவின் அம்மா பிரசன்னமானால்...

"சுந்தரமா, வாப்பா அம்மா காசு கொடுத்து அனுப்புச்சா" என்றவள் கவிதாவின் அருகில் இருந்த பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தால்.

"சரியா இருக்காம்மா" என்றவன் கவிதாவை பார்த்தான் அவள் எந்த சலனமும் இன்றி தன் வேலையில் ஆழ்ந்துவிட்டால். 

------ நாளை நிறைவடையும்...

5 comments:

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பரே.

எழுத்துப் பிழைகளை சரிசெய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.(தவறாக எண்ண வேண்டாம்)

Chitra said...

"சரியா இருக்காம்மா" என்றவன் கவிதாவை பார்த்தான் அவள் எந்த சலனமும் இன்றி வேளையில் ஆழ்ந்துவிட்டால்.

..... கதை நல்லா போகுதுங்க.....

தப்பா எடுத்துக்காதீங்க..... எழுத்து பிழையை கொஞ்சம் திருத்தி போட்டீங்க என்றால், கதையின் அர்த்தம் மாறாமல் இன்னும் நல்லா இருக்கும்.

Deepak Kumar Vasudevan said...

இடுகை சார்ப்பற்ற கருத்து: தமிழ்த்தென்றல் பதிவில் 'வரி குறித்த வீடியோ' தெரியவில்லை என்று தெரிவித்துள்ளீர்கள். நீங்கள் பார்க்கும் பிழை என்ன என்று கூற முடியுமா? பல இடங்களில் இதனை பரிசோதித்தும் எனக்கு எல்லா இடங்களிலும் வீடியோ ஓடுகிறது.

ராசராசசோழன் said...

எழுத்து பிழைகளை சரி செய்துவிட்டேன்...

கருத்துக்கு நன்றி.. செ.சரவணக்குமார் ,Chitra

Deepak Kumar Vasudevan - மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு தெரியவில்லை என்றால் தெரிவிக்கிறேன்...

Sangkavi said...

கதை நல்லா நல்லாயிருக்கு நண்பரே....

Post a Comment

Related Posts with Thumbnails