அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 28, 2010

அழகாய் மனிதர்கள் செதுக்கிய ஓவியம்...

வயலோர வரப்புகள்,
அது அழகாய்
மனிதர்கள்
செதுக்கிய ஓவியம்...
அதோ அந்த
மலை முகடு,
அதை ஒட்டிய
மாலை நேர சூரியன்...
சிறு சாரலாய்
சன்னல் நனைக்கும்
கோடை மழை...
யாருக்கும்
அடங்காத,
ஆதி அந்தம்
தெரியா இருப்புப்பாதை...
பனம் பழம்
விற்ற பாதையோர
சிறுவர்கள்...
இனி 
எப்போது வாய்க்கும்
இனிய
இந்த
மாலை நேர
பேருந்து பயணம்...
நினைவுக்குள்
நிழலாடும்
அடங்காத
ஆசை இது...
தூர தேச
தமிழர்களின்
விழி  ஏங்கும்
கனவு இது...

2 comments:

Chitra said...

nice. :-)

skaamaraj said...

//யாருக்கும்
அடங்காத,
ஆதி அந்தம்
தெரியா இருப்புப்பாதை...

பனம் பழம்
விற்ற பாதையோர
சிறுவர்கள்...//

ஒரு வாரத்துக்கு முன்னர்தான் இந்த பனம் பழத்தைப் பற்றி வெகுநேரம் பேசிக்கிடந்தோம்.தூரத் தேசத்திலிருந்து அதன் வாசனையைக் கொண்டு வந்துவிட்டீர்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails